விறகு அடுப்பில் வெண்ணிலா கேக்

இந்த பொங்கலுக்கு வித்தியாசமாக கேக் செய்து சாப்பிடலாம் என்று தோன்றியது. எனவே தேவையான பொருட்களை வாங்கி விறகு அடுப்பில் செய்தேன். சமையல் எரிவாயு விரைவிலேயே தீர்ந்துவிடுவதால் அதனை சிக்கனமாக பயன்படுத்தவேண்டிய நிலை. இந்த கேக் செய்யும் முறையை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கலுடன் கேக்கையும் செய்து சாப்பிடுங்கள்.

தேவையானப் பொருட்கள்:

மைதா மாவு: கால் கிலோ
சர்க்கரை: கால் கிலோ
முட்டை: ஐந்து
பால்: கொஞ்சம்
வெண்ணெய் அல்லது நெய்: கால் கிலோ
வெண்ணிலா essence:   மூன்று தேக்கரண்டி
Baking Powder:   ஒரு தேக்கரண்டி
Baking Soda:   ஒரு தேக்கரண்டி
முந்திரி, Cherry இவைபோன்ற அலங்காரப்பொருட்கள்: தேவையான அளவு
Food Colour Powder:   சிறிதளவு

செய்முறை

தேவையான பொருட்களை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். கேக்கை பொதுவாக ovenல் செய்வார்கள். ஆனால் நாம் அடுப்பில் செய்வதால் ஒரு இரும்பு தோசைக்கல்லை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மணலை பரப்பி (இரண்டு inch அளவு) அதன்மேல் கேக் கலவை உள்ள அலுமினியப் பாத்திரத்தை (கண்டிப்பாக அலுமினியம்தான்) வைத்து செய்யப்போகிறோம். சரி இப்போது அந்த கேக் கலவை செய்யும் முறையைப் பார்ப்போம்.

மைதா மாவு, சர்க்கரை, முட்டை, வெண்ணெய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்துகொள்ளவும்.

கேக்-செய்முறை-1

பின் சர்க்கரை, வெண்ணிலா essence மற்றும் கொஞ்சம் பால் சேர்த்து நன்றாக மென்மையாகும்வரை கலக்கவும்.

கேக்-செய்முறை-2

பிறகு நிறத்திற்கு colour powder சேர்த்து, baking powder, baking soda போட்டு நன்கு கலக்கிக்கொள்ளவும்.

கேக்-செய்முறை-3

Cherry பழம், முந்திரி போன்றவற்றை சேர்த்து கலக்கவும்.

கேக்-செய்முறை-4

ஒரு தட்டையான அலுமினியப் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதில் இந்த கேக் கலவையை ஊற்றி சமமாக பரப்பவும். பின் அந்த பாத்திரத்தை கண்ணால மூடியால் மூடி (காற்று போக) முன்பே கூறியதைப் போன்று தோசைக்கல்லில் வைத்து வேகவைக்க வேண்டியதுதான். குறிப்பு: மிதமான தீயில்தான் வேகவைக்கவேண்டும்.

கேக்-செய்முறை-5

கேக்-செய்முறை-6

நான் பல நிறம் கலந்ததால் அந்த கேக் கலவை அப்படியிருக்கிறது. ஒரு நாற்பத்தியைந்து நிமிடம் அல்லது ஐம்பது நிமிடம் கழித்து பார்த்தால் கேக் நன்கு உப்பியிருக்கும்.

கேக்-செய்முறை-7

அவ்வளவுதான். சுவையான கேக் தயார்.

நான் செய்த கேக் ஒன்னேகால் கிலோ வந்தது. இதற்கான செலவு ரூ.110. இதுவே கடையில் வாங்கினால் ஒரு கிலோ ரூ.300. நீங்களும் முயற்சி செய்து பார்த்து சொல்லுங்கள்.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

8 Comments

 1. Iniya January 14, 2015
 2. Yarlpavanan Kasirajalingam January 15, 2015
 3. Ashok Kumar January 15, 2015

Leave a Reply

task-accepted.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழில் எழுத இங்கு சொடுக்கவும்.
 

Your email address will not be published. Required fields are marked *

Question  Razz Sad  Evil Exclaim Smile Redface Biggrin Surprised Eek  Confused  Cool LOL  Mad  Twisted Rolleyes  Wink Idea Arrow Neutral Cry  Mr. Green

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.