ஆத்திச் சூடி 2013

Spread the love

ஔவை நான் ஒரு புலவர் ஆக முடிவெடுத்துவிட்டேன். அதனுடைய துவக்கம்தான் இது. ஆத்திச் சூடி போன்று ஒரு பாடல் எழுதலாம் என்று முயன்றிருக்கிறேன். ஓசைகள் சரியாக அமையவில்லை என்றாலும், கூற வரும் கருத்தை கவனிக்கவும்.

 1. ன்புடன் அனுகு
 2. ணவம் அகற்று
 3. ரவல் விலக்கு
 4. தல் ஒதுக்கேல்
 5. றுதியே துணை
 6. னத்தை இகழேல்
 7. ள்ளி நகையேல்
 8. ளனம் பேசேல்
 9. ம்புலன் அடக்கு
 10. ன்றே இறைவன்
 11. ரம் போகேல்
 12. வை சொல் கேள்
 13. தும் இதும் மேல்.

அர்த்தங்கள்

படித்ததுமே புரிந்திருக்கும். இருந்தாலும் விளக்கவேண்டியது என் கடமை.

1. அன்புடன் அனுகு – எந்த ஒரு செயலையும் ரசித்து அதனை செய்யவேண்டும். பிறரிடம் பழகும்போது ஒவ்வொரு முறை அவர்களை அனுகும்போது அன்போடும் பாசத்தோடும் அனுகினால் ஊரில் உள்ள அனைவருமே நமக்கு எப்போதும் நண்பர்களாக இருப்பர்.

2. ஆணவம் அகற்று – செருக்கு, அதாவது ஆணவம்தான் ஒருவனுக்கு அழிவை ஏற்படுத்தும் நோய். அதனை கை விட்டால் நம் பெயர் இந்த உலகம் அழியும் வரை இருக்கும்.

3. இரவல் விலக்கு – கடன் வாங்கக்கூடாது. ‘கடன் அன்பை முறிக்கும்’ என்பார்கள். மேலும் கடன் வாங்குவதால் பல பிரச்சினைகள் வருகின்றன. உதாரணத்திற்கு ஒரு ஏழைப் பெண்மணி ஒருவளிடம் நகை இரவல் வாங்கி ஒரு திருமணத்திற்கு அணிந்து செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒருவேளை அதை அவர் தொலைத்துவிட்டால் ஏழையான அவர் எப்படி அதனை நகைக்குச் சொந்தக்காரரிடம் கொடுப்பார்?

4. ஈதல் ஒதுக்கேல் – நாம் செய்யும் தர்மம்தான் நாம் சாகும் வரை நம் கூடவே வரும். எனவே தர்மம் செய்வதை ஒதுக்கவே கூடாது.

5. உறுதியே துணை – மனதில் உறுதி வேண்டும். உறுதியோடு செய்யும் செயல் ஒவ்வொன்றும் வெற்றியடையும். உறுதிதான் நமது வாழ்க்கைக்குத் துணை.

6. ஊனத்தை இகழேல் – ஒரு ஊனமுற்றவரைப் பார்த்து இகழும்முன் அந்த ஊனம் நமக்கு வந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப் பார்த்தால் நாம் அவரை இகழமாட்டோம்.

7. எள்ளி நகையேல் – பிறரை அவரது மனம் புண்படும்படி பேசுவது, அவர்களைப் பார்த்து கேவலமாக சிரிப்பது போன்றவைகளைத் தவிர்க்கவேண்டும்.

8. ஏளனம் பேசேல் – மற்றவர்களை குறைத்து மதிப்பிட்டு பேசுதல், அவதூறு பேசுதல், இவரிடம் அவரைப் பற்றி ஏளனமாக பேசுதல், அவரிடம் இவரைப் பற்றி ஏளனமாக பேசுதல் இவைகளையெல்லாம் தவிர்க்கவேண்டும்.

9. ஐம்புலன் அடக்கு – நமது ஐம்புலங்களால் வரும் பிரச்சினைகள்தான் அதிகம். எனவே ஐம்புலங்களை அடக்கி ஒழுக்கமாக வாழவேண்டும்.

10. ஒன்றே இறைவன் – சாதி, மத, இன கலவரங்கள் கூடாது. உலகில் உள்ள அனைவருக்கும் இறைவன் ஒருவனே என்னும் எண்ணம் வேண்டும்.

11. ஓரம் போகேல் – எந்த ஒரு செயலிலும் முடியாது என்ற விளிம்பிற்கு செல்லக் கூடாது. அதாவது ஒரு செயலை செய்யத் தொடங்கிவிட்டு அது முடியாது என்று ஓரம் போகக்கூடாது. விளிம்பில் சென்றால் என்ன நடக்கும்? நிலை தடுமாறி விழுந்து பலத்த அடி வாங்குவோம்.

12. வை சொல் கேள் – இங்கு ஔவை என்பதை அனுபவ அறிவு உடைய வயதானவர்கள் என்னும் அர்த்தத்தில் குறிக்கிறேன். எனவே பெரியவர்கள் சொல்வதை கடைபிடிக்கவேண்டும். அது நமது வாழ்கையின் முன்னேற்றதிற்கு உதவும்.

13. அஃதும் இதூம் மேல் – அன்று ஔவை சொன்ன ஆத்திச் சூடியும் இன்று நான் எழுதியிருக்கும் ஆத்திச் சூடியும் வாழ்கையில் கடைபிடிக்கவேண்டிய மேன்மையான கருத்துக்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.


Spread the love

2
Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
avatar
2 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
0 Comment authors
Aasaiதிண்டுக்கல் தனபாலன் Recent comment authors
  Subscribe  
Notify of
திண்டுக்கல் தனபாலன்
Guest
திண்டுக்கல் தனபாலன்

நல்ல முயற்சி…

நன்றாக எழுதி உள்ளீர்கள்… விளக்கம் கொடுத்ததும் சிறப்பு… பாராட்டுக்கள்…

தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்… நன்றி…

தொடர வாழ்த்துக்கள்…

Aasai
Guest
Aasai

“தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.