Monthly Archive:: July 2012

அன்பே சிவம்

வியாபாரி ஒருவன் நாய் ஒன்று வளர்த்து வந்தான்.அவன் வியாபாரத்திற்கு வெளியூர் செல்லும்போதெல்லாம் அதனையும் அழைத்து செல்வான். அவனுக்கு அந்த நாய் மீது அலாதிப் பிரியம். அந்த நாயும் அவனிடம் அளவுகடந்த அன்பு வைத்திருந்தது. இருவரின் பாசப் பிணைப்பின் காரணமாக இருவரும் ஒரே நேரத்தில் இறந்தனர். இப்போது அவர்கள் சொர்க்கத்திற்கு செல்லும் பாதையில் நடந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கோ …

எனக்கு பிடித்த பக்திப் பாடல்

இயேசு ஓவியம் பின்வரும் கிறுஸ்துவ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம் மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம் தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் …

இயற்கையைப் பார்

இயற்கைக் காட்சி கண்ணுக்கு விருந்தாக களிப்பூட்டும் காவியமாக சிந்திக்க வைக்கும் சித்திரமாக சித்தரிக்கும் கலை அழகாக படைப்பின் இலக்கணமாக படைப்பாளிகளின் பக்க துணையாக உணர்வுக்கு ஒரு வசந்தமாக உயிர்களுக்கு உறைவிடமாக பசுமை எழிலின் துள்ளலாக பார்ப்பவர்களுக்கு கொடை வள்ளலாக இறைவனின் வண்ண ஓவியமாக கவிஞர்களின் கண்கவர் காவியமாக ஐம்பூதங்களின் ஐக்கியமாக-விளங்கும் அழகு இயற்கையைப் பார்! இன்ப …

முயற்சி திருவினையாக்கும்

ஒத்த பழமொழிகள்: முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் தகரும். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். எறும்பூரக் கல்லும் தேயும். தூக்கணாங் குருவி கூட்டைப் பார்த்திருப்பீர்கள்.அது ஒரு மரத்திலோ,செடியிலோ அல்லது கிணற்றிலோ தொங்கிக்கொண்டிருக்கும்.அதை அந்த குருவி எப்படி கட்டுகிறது? காற்று அடிக்கும்போது கூடு ஆடும்.ஆனால் …

நாம் நாமாக இருப்போம்

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது.இதில் ஒருவர் பெரியவர் இன்னொருவர் சிறியவர் என்ற பாகுபாடு இல்லை.ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு.ஒருவரிடம் உள்ள திறமை மற்றொருவரிடம் இருக்காது. ஆனால் சிலர் நான் அவன் போல் இல்லையே, இவன் போல் இல்லையே என்று பொறாமை படுகின்றனர்.நான் அவனைப் போன்று அறிவாளியாக இல்லையே என்று தங்கள் மீதே …

ஏன் நாம் குழந்தைகளாகவே இருக்கக் கூடாது

“மீனா ! மீனா ! எங்க இருக்க?” மீனாவை பார்க்க வந்த கமலா கூப்பிட்டாள். “இங்கதான் இருக்கேன்.” இருவரும் நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளித் தோழிகள். “நான் ஒரு பாட்டு புதுசா கத்துட்டு வந்திருக்கேன்.” கமலா கூறினாள். “புது பாட்டா ? ஏ ! ஏ ! எனக்கும் சொல்லிக் கொடு !” பாட ஆரம்பித்தாள் …

திருக்குறள்-நீத்தார் பெருமை,அறத்துப்பால் மூன்றாம் அதிகாரம்

1.ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு. சான்றோர் நூலில் விருப்பமுடனும் உயர்வாகவும் ஒழுக்கத்தில் சிறந்த பெரியோர்களில் பெருமை இடம்பெறும். 2.துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று. உலகில் இறந்தவர்களை கணக்கிடுவது கடினம்.அதுபோல ஆசை மற்றும் பற்றுகளை துறந்த ஒழுக்கமுடையவர்களின் பெருமைகளை அளவிட முடியாது. 3.இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்பெருமை பிறங்கிற்று உலகு. இருமை …
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.