ஆவாரை செடி

ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா

சிறுகதைகள் தெரிந்துகொள்ளுங்கள்
ஆவாரை செடி
ஆவாரை செடி

பாட்டி!பாட்டி! என்ன பன்ற?” என்று வரப்பு ஓரமாக ஏதோ பறித்துக் கொண்டிருந்த தனது பாட்டியைப் பார்த்து கேட்டான் சிறுவன் மணி.

“ஆவாரை தழைப் பறிக்கிறேண்டா செல்லம்” என்றார் பாட்டி.
“எதுக்கு?” வினவினான் மணி.
“உன் கூட்டாளி சுமிதாவுக்கு கையில அடிபட்டு கட்டு போட்டாங்கல்ல?”-பாட்டி கேட்டார்.
“ஆமாம்”-மணி.
“கைய அசைக்காம அப்படியே வச்சிருந்ததால இப்ப கைய மடக்கவே முடியலையாம்.எலும்பு அப்படியே கூடிடுச்சி.அதான் அத சரிபண்ண இத பரிச்சி எடுத்துட்டு போறேன்.”
“இந்த தழை எப்படி சரிபண்ணும்?” ஆச்சர்யதுடன் கேட்டான் மணி.
இத கையில நல்லா இறுக்கமா புடிசிக்கிட்டே இருக்கனும்.அப்படி செஞ்சா தழையோட ஆவி பட்டு கை எலும்புகள் வளையும் சக்திய பெரும்.ஒரு பத்து பாஞ்சி நாளு செஞ்சா கை சரியாகிடும்.”
“உண்மையவா?”
“ஆமாம்.எனக்கு கூட ஒருதடவ இப்படி குணமாகியிருக்கு.”
“ஐயோ!இந்த தழைக்கு இவ்வளவு மகத்துவமா?” என்று ஆச்சரியப்பட்டான் மணி.
ஆமாம்பா.சும்மாவா சொன்னாங்க ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா?’ அப்படினு”.
“ஏன் அப்படி சொல்றாங்க?”
“ஏன்னா ஆவாரை  அவ்வளவு பயன்படுது. அதோட மகத்துவங்கல சொல்றேன் கேட்டுக்கோ. சீக்காய் அரைக்க உதவுது. காலப்போக்குல சீக்காய் பயன்படுத்துறது கொறஞ்சிக்கிட்டே வருது. சீக்காய் முடி கொட்டுற பிரச்சினய கொறைக்குது. ஆவாரை இலைய வச்சி எலும்புகளை வணக்கம்(நினைப்பதற்க்கு ஏற்றவாறு வளைத்தல்) கொடுக்க வைக்கலாம். பூவ கொதிக்க வச்சி டீ சாப்படலாம். பூ இதழ தெனமும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தா எலும்புகள் உறுதியாகும். அதோட ஆவார பூ கொழம்பும் வக்கலாம். நமது உடல்ல பல நோய்கள குணப்படுத்த உதவுது. அதோட பயன் தெரிஞ்சு பயன்படுத்துரவங்களுக்கு சீக்கிரத்தில் சாவு வராது.”
“ஆமாம் பாட்டி, ‘ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா?’ அப்படினு சரியாத்தான் சொல்லியிருகுறாங்க.” என்று மணி கூற இருவரும் வீட்டுக்கு நடையை கட்டினர்.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

மரிய ரீகன் ஜோன்ஸ்

தமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.

http://www.tamilpriyan.com

3
Leave a Reply

avatar
3 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
3 Comment authors
Lift Kitsarch supportsBill Raymond Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Bill Raymond
Guest
Bill Raymond

Thank you a lot for giving everyone such a splendid chance to read
articles and blog posts from this web site.

arch supports
Guest
arch supports

Appreciate the recommendation. Will try it out.

Lift Kits
Guest
Lift Kits

Aѡsome site! Nice content. I am loving it!!