திருக்குறள்-வான்சிறப்பு,அறத்துப்பால் இரண்டாம் அதிகாரம்

Spread the love

1. வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

உலகை வாழ வைப்பது மழை.எனவே அதுவே அமிழ்தம் ஆகும்.

2. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.

உணவுப் பொருள்களை விளைவித்து தர உதவுவது மழை.அதுவே மக்களுக்கு அவர்கள் அருந்தும் உணவாகவும் மாறி அறிய தியாகத்தை செய்கிறது.

3. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி.

இந்த உலகம் கடல் நீரால் சூழ்ந்தது.எனினும் மழை இல்லையென்றால் பசியின் கொடுமை உலகை வாட்டும்.

4. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

மழை உழவ்ர்களுக்கு ஒரு வருவாய் போன்றது.அது குறைந்துவிட்டால் விவசாயம் பாதிக்கும்.

5. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

மழை பெய்யாமல் இருந்தால் அது உயிர்களின் வாழ்வை கெடுக்கும்.அதுவே தக்க சமயத்தில் பெய்தால் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்க்கும்.

6. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.

வானிலிருந்து மழை பெய்யவில்லையென்றால் பூமியில் புல் பூண்டு முளைப்பது கூட கடினம்.

7. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

கடல்நீர் மேகமாக மாறி அதே கடலில் மழையாக பெய்தாலன்றி கடல் வற்றாமல் இருப்பது கடினம்.அதுபோல சமுதாயத்திலிருந்து உயர்நிலைக்குச் சென்றவர்கள் அந்த சமுதாயத்திற்கு பயன்பட்டால்தான் சமுதாயம் வாழும்.

8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

வானம் பொய்த்துவிட்டதென்றால் அந்த வானத்தில் உள்ள சொர்க்கத்தில் வாழும் தேவர்களுக்கு விழாக்களும் இல்லை,வழிபாடும் இல்லை.

9. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

உலகில் மழை பொய்த்துவிட்டால் அது நாம் செய்யும் தானத்திற்கும் மேற்கொள்ளும் நோன்பிற்கும் தடங்கலாகும்.

10. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.

உலகில் தண்ணீர் இல்லையென்றால் உலகமே இல்லை.எனவே மழை பொய்த்துவிட்டால் நீர் இல்லை.உலகில் ஒழுக்கமும் கெடக்கூடும்.எனவே நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படவேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.


Spread the love

1
Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
0 Comment authors
parhti zplus Recent comment authors
  Subscribe  
Notify of
parhti zplus
Guest
parhti zplus

நான் தினமும் பார்க்கும் இணையத்தளம் http://www.valaitamil.com/thirukkural.php திருக்குறளை மிக சிறப்பாக தொகுத்துள்ளது. பார்த்து மகிழவும்

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.