கவிதைகள் Archive

ஆசை

சொந்தத்தோடு சொர்க்கம் பார்க்க ஆசை சொந்ததேவை துறந்துவிட ஆசை சிட்டுபோல சிறகடிக்க ஆசை சிறந்த படைப்பின் சிறப்பை சொல்ல ஆசை   கானம் பாடும் வானம்பாடி ஆக ஆசை வானம் என்ன தூரம் என காண ஆசை கடலின் ஆழம் கண்டுபிடிக்க ஆசை மடல் விரியும் பூப்படைத்த புனிதன் காண ஆசை   நானும் ஒரு …

விவசாயம்-உழவர் திருநாள் சிறப்புக் கவிதை

மூச்சே உயிர்க்கு ஆதாரம் அழகு இயற்கைக்கு ஆதாரம் குளிர்காற்று மழைக்கு ஆதாரம் பயிரே உணவுக்கு ஆதாரம் பயிர் இல்லையேல் ஆகும் உயிர் சேதாரம். வாழ்க்கைக்கு பணம் அச்சாணி உயர்வுக்கு உழைப்பு அச்சாணி நட்புக்கு நம்பிக்கை அச்சாணி தூய்மைக்கு வாய்மை அச்சாணி வாழ்விற்கு விவசாயம் அச்சாணி மாந்தர்க்கு விவசாயி ஒரு கடையாணி. விளைபொருள் பாங்காய் தருபவரே! பழங்கள், …

என் இந்தியா

என் தாய் நாடே ! என் உயிர் மூச்சே ! உன் அழகும், உன் பண்பும், விண்ணையும் வியப்பில் ஆழ்த்தும். எத்தனை மொழிகள் ! எத்தனை மதங்கள் ! எத்தனை இனங்கள் ! எத்தனை பிரிவுகள் ! எல்லாம் உந்தன் அழகே !   உன் வீரம் பெரிது, சாதனை பெரிது. உந்தன் பண்டைய வரலாறும் …

முட்டாள் !

கரைந்து போகும் பணத்திற்காக காலமெல்லாம் பதைக்கிறாய் மடிந்துபோகும் மக்கள் மீது மனம் பதற மறுக்கிறாய் அழிந்து போகும் வாழ்விற்காக அஞ்சாமல் அலைகிறாய் சொகுசாக வாழ எண்ணி சொந்தங்களை மறக்கிறாய் பாசம் காட்டப் பழகாமல் பாதிபேரை பகைக்கிறாய் அறம் செய்ய நினையாமல் அடுக்கடுக்காய் சேர்க்கிறாய் சமத்துவம் சரிந்தால் சளைக்கிறாய் சரிக்கு சரிகட்ட துணிகிறாய் நீ வாழ பிறர் …

மகாத்மா காந்தி

அடிமையை போக்க வந்த வாய்மையே ! அன்பு வழிகாட்டித் தந்த அற நெறியே ! சாந்தமே உருவான சத்தியமே ! காந்தத்தை பெயராய்க் கொண்டவரே ! சீலம் சிறிதும் குறையாத எளியவரே ! மாந்தர்கள் போற்றும் நல்லவரே ! – எம் மனதில் மிடுக்காய் என்றும் உள்ளவரே ! சற்றும் நேர்மை பிறழா வலியவரே ! …

இயற்கையைப் பார்

இயற்கைக் காட்சி கண்ணுக்கு விருந்தாக களிப்பூட்டும் காவியமாக சிந்திக்க வைக்கும் சித்திரமாக சித்தரிக்கும் கலை அழகாக படைப்பின் இலக்கணமாக படைப்பாளிகளின் பக்க துணையாக உணர்வுக்கு ஒரு வசந்தமாக உயிர்களுக்கு உறைவிடமாக பசுமை எழிலின் துள்ளலாக பார்ப்பவர்களுக்கு கொடை வள்ளலாக இறைவனின் வண்ண ஓவியமாக கவிஞர்களின் கண்கவர் காவியமாக ஐம்பூதங்களின் ஐக்கியமாக-விளங்கும் அழகு இயற்கையைப் பார்! இன்ப …

மரமாய் பிறக்க வேண்டும்

மரமே! நாங்கள் உன்னை வளர்க்கிறோம்; நீ எங்களுக்காகவே வளர்கிறாய். பூமியிலிருந்து சத்துக்களை உறுஞ்சுகிறாய்; நன்றிக்கடனாக வெள்ளத்தின் போதும் புயலின் போதும் மண்ணரிப்பைத் தடுக்கிறாய். நாங்கள் தண்ணீர் ஊற்றுகிறோம்; கைமாறாக எங்களுக்கு காய் கனிகளைத் தருகிறாய். நன்றி மறவா பிறவியே! உன்னை வெட்டுபவர்களைக் கூட மன்னித்து அவர்களுக்கு பயன்படும் பொருளாகிறாய். வெட்டினாலும் இறந்துவிடுவதில்லை நீ! தன்னமிக்கையுடன் மீண்டும் …
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.