சிறுகதைகள் Archive

பேய் இருக்கா? இல்லையா?

பேய் இருக்கா? இல்லையா? இந்த கேள்விதான் வாசு மனதில் அடிக்கடி ஓடிக்கொண்டிருப்பது. அதற்கு காரணம் அவன் பேய் பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறான். அவன் மனம் ஒருபக்கம் பேய் இருக்கிறது என்று கூறுகிறது. மற்றொரு பக்கம் அதெல்லாம் வெறும் மூட நம்பிக்கையென்று கூறுகிறது. அடிக்கடி அவன் பேய் கதைகள் கேள்விப்படுகிறான். தன் சொந்த ஊரிலும் …

பேயாவது! பிசாசாவது! நான் நம்பமாட்டேன்

மணி நன்கு படித்தவன். துபாயில் ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராக வேலைப் பார்த்துக்கொண்டிருந்த அவன், தன் சொந்த ஊருக்கு வந்திருக்கிறான். “விவசாயம் செய்தே பிழைத்துக் கொள்ளலாம். எதற்காக வெளிநாட்டில் அடிமை போன்று வேலை செய்யவேண்டும்?” என்பது அவனது எண்ணம். தன் குடும்ப கஷ்டத்துக்காக பத்து வருடங்களாக துபாயிலேயே இருந்தான். இப்போது அவன் குடும்பம் தலை தூக்கிவிட்டது. …

அம்மா-பாசத்தின் தெய்வம்

இந்த கதை உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. கள்ளிப்பட்டு என்னும் ஊரில் இருந்தது அந்த அரசினர் பள்ளி. அங்கு ஐந்தாம் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் சிறப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். அப்போது “ஐயா” என்று ஒரு குரல் கேட்டது. ஆசிரியர் திரும்பிப் பார்த்தார். வகுப்பறையின் வாசற்படிக்கு அருகே முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் …

சாந்தி அடையாத ஆவி கதை

முப்பது வருடங்களுக்கு முன்பு, சுக்கம்பட்டி என்னும் ஊரில் இருந்தது அந்த ‘முருகன் திரையரங்கம்’. சுற்றி உள்ள ஊர்களின் மக்கள் அனைவருக்கும் பொழுதுபோக்கிற்காக உள்ள ஒரே ஒரு திரையரங்கம் அதுதான். அவர்கள் சாதி மத பாகுபாடில்லாமல் ஒற்றுமையோடு வாழ்ந்து வந்தனர். மக்கள் அனைவரும் பகலில் கூலி வேலைக்குச் சென்றுவிடுவதால் இரண்டு இரவுக்காட்சிகள் மட்டுமே திரையிடப்படும். வாரம் முழுவதும் …

மினி பேய் கதை

“டேய்! நீ என்னைய பயம்புறுதிறதுக்காக பொய் தான சொல்ற?” ராமு கேட்டான்.“இல்லடா! உண்மையாத்தான் சொல்றேன்! மினிபேய் ராத்திரி நேரத்துல நம்மள கொல்ல வரும்டா. வரும்போது நமக்கு தெரிந்தவர்கள் போன்று உரு மாற்றி வரும். நம்மள எங்காவது கூட்டிட்டுப் போயி கொன்னுடும்டா!”  ராஜேஷ் கூறினான். “அப்படியா?” “ஆமாண்டா! நாம தப்பிசிட்டாலும் பல வேஷங்கல்ல வந்து எப்படியாவது கொன்னுடும்.” …

நாம் நாமாக இருப்போம்

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது.இதில் ஒருவர் பெரியவர் இன்னொருவர் சிறியவர் என்ற பாகுபாடு இல்லை.ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு.ஒருவரிடம் உள்ள திறமை மற்றொருவரிடம் இருக்காது. ஆனால் சிலர் நான் அவன் போல் இல்லையே, இவன் போல் இல்லையே என்று பொறாமை படுகின்றனர்.நான் அவனைப் போன்று அறிவாளியாக இல்லையே என்று தங்கள் மீதே …

விதியையும் மதியால் வெல்லலாம்

இதுதான் நமது வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான பழமொழி. ஏனென்றால் சிலர் அவர்களது வாழ்கையில் துன்பங்கள் ஏற்படும்போது “ எல்லாம் என் விதி! என்ன செய்வது?” என்று விரக்தியில் பேசுவார்கள். அவர்களை முட்டாள்கள்,சோம்பேறிகள் இன்னும் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். புத்திசாலிகளும் உழைப்பாளிகளும் அப்படி கூற மாட்டார்கள்.துணிந்து போராடுவார்கள். நடக்கப்போகும் கெடுதலை நம் நம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் …

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

ஒத்த பழமொழிகள்: 1. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. 2. ஒற்றுமையே பலம். 3. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம். 4. தனிமரம் தோப்பாகாது. ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்தால் நமக்குள் சண்டை வரவே வராது.ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை பெரியோர்களும் கவிஞர்களும் காலம் காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.உதாரணத்திற்கு பின்வரும் கூற்றை நாம் கேள்விப்பட்டிருப்போம். “ நான்,நீ என்று சொன்னால் …

திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்

ஒத்த பழமொழிகள்: ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலே அழிவான். கெடுவான் கேடு நினைப்பான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். மற்றவர்களுக்கு கெடுதல் நினைப்பவனுக்கு கெட்டதே நடக்கும்.கேடு என்றால் கெடுதல் என்று அர்த்தம்.அடுத்தவன் அழிந்துபோக வேண்டும் என்று நினைப்பவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான்.இந்தக்கருத்தையே மேற்கண்ட பழமொழிகள் வலியுறுத்துகின்றன. “ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலே அழிவான்” என்றால் ஒருவன் செய்யும் …

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்காதே

ஒத்த பழமொழிகள்: 1.     கிடைக்கப் போகும் பலா காயைவிட கையில் இருக்கும் கிலாக் காய் மேல். 2.     வச்ச பதம் இருக்க பிச்சை பதம் வேண்டாம். மூன்று பழமொழிகளும் கிட்டத்தட்ட ஒரே பொருளை உணர்த்துகின்றன. கதை: ஒரு காட்டில் சிங்கம் ஒன்று மிகுந்த பசியோடு இரையைத் தேடிக்கொண்டிருந்தது.நாள் முழுவதும் தேடியும் ஒன்றும் அகப்படவில்லை.அதனால் அதற்கு பசியால் …
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.