விதியாவது சதியாவது

Despair_Manஎன் ஆசிரியர் ஒருவர் சொன்ன கருத்துக்கள் இன்னும் என் மனதில் பதிந்து இருக்கின்றன. மேலும் என் வாழ்கையில் சில சமயங்களில் உதவியாகவும் இருக்கின்றன. அதை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்த கருத்துக்களுக்கு “விதியாவது சதியாவது” என்னும் தலைப்பைக் கொடுக்கிறேன்.

நாம் நேர்மையாக வாழும்போது கடவுள் அனைத்தையும் நமது நன்மைக்காகத்தான் செய்வார் என்று நம்பணும். இந்த கருத்து பிடித்தாலும் சரி பிடிக்கலனாலும் சரி, ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும்.

துன்பத்தைக்கண்டு துவளக்கூடாது. இன்பத்தைக்கண்டு துள்ளிக் குதிக்கக் கூடாது.

நேர்மறையான எண்ணம் வேண்டும். வாழ்க்கை என்பது ரோஜா பூக்கள் நிறைந்த மெத்தையல்ல.

நமது வாழ்க்கை ஒரு ரோஜா செடியைப் போன்றது. சாதிக்க விரும்பினால் முள்ளைத் தவிர்த்து மலர்களை மட்டும் பறிக்க வேண்டும்.

துன்பங்களைப் பார்த்து முள் குத்துகிறதே என்று ஒதுங்கினால் ரோஜாப்பூ எப்படி நமது கைக்கு வரும்?

நம் வாழ்வில் ஒரு அர்த்தம் இருக்கணும். நாம் தூங்கப்போகும் முன் அன்றைய தினத்தின் நிகழ்வுகளை மற்றும் நமது செயல்களை திரும்ப யோசித்துப் பார்த்தால், நமது குறை நிறைகள் தெரியும். குறைகளை குறித்து வைத்துக்கொண்டு படிப்படியாக திருத்திக்கொள்வது நல்லது.

ஒன்று மட்டும் மனசுல நெரந்தரமா வச்சிக்கணும். நமது முன்னேற்றமும் சரி, மகிழ்ச்சியும் சரி, அடுத்தவர்களை அடமானம் வைத்துப் பெறுவதாக இருக்கக்கூடாது.

கடவுள் நம்பிக்கை என்ற அஸ்திவாரத்தோடு, உண்மை, உழைப்பு மற்றும் நேர்மை என்பவைகளான ஜல்லி, சிமெண்ட்டு மற்றும் செங்கற்களுடன், மனித நேயம் என்னும் நீரைப் பயன்படுத்தி, வாழ்க்கை என்னும் வீட்டைக் கட்டினால் விதியாவது சதியாவது, பரகதி என்னும் சொர்க்கத்தை அடைய முடியும். மகாத்மா நமக்குள் இருக்கும். மனிதப்பிறவி எடுத்ததின் அர்த்தமும் விளங்கும்.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Ramani S
செப்டம்பர் 12, 2013 3:45 காலை

அருமையான கருத்தை
அற்புதமாகச் சொல்லிப்போகிறீர்கள்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.