வாருங்கள், பாடி மகிழ்வோம்!

சிறு வயதில் வகுப்பில் இருப்பதே பெரும் ஆனந்தமாக இருக்கும். அதுவும் ஏதாவது பாட்டு கற்றுக் கொடுக்கபோகிறார்கள் என்றால் ஒரே குதுகலம்தான். சிறு வயது நினைவுகள் என் மனதில் பசுமையாக உள்ளன. “சிறு பிள்ளையாகவே இருந்திருக்கக்கூடாதா?” என நினைப்பதும் உண்டு. வாருங்கள், நான் சிறு வயதில் கற்றுக் கொண்ட பாடல்களை பாடி, பிள்ளைப் பருவத்தைக் கொண்டாடுவோம்.

சிறுவர்கள்

 • ஊஞ்சல் ஆடிட வா தங்காய்!
  வா தங்காய் ! வா தங்காய்!
  ஊஞ்சல் ஆடிட வா தங்காய் !ஊஞ்சலை நோக்கி பார்க்கும் சமயம்
  ஊஞ்சல் சர சர வென்றோடிற்று.
  வா தங்காய் ! வா தங்காய்!
  ஊஞ்சல் ஆடிட வா தங்காய் !ஊஞ்சலில் ஏறி உட்காரும் சமயம்
  நெஞ்சு பட பட துடித்திட்டது.
  வா தங்காய் ! வா தங்காய்!
  ஊஞ்சல் ஆடிட வா தங்காய் !ஊஞ்சலில் இருந்து இறங்கும் சமயம்
  துணிதான் பர பர கிழிந்திட்டது.
  வா தங்காய் ! வா தங்காய்!
  ஊஞ்சல் ஆடிட வா தங்காய் !

 

 • நிலா நிலா ஓடி வா!
  நில்லாமல் ஓடி வா!
  மலை மீது ஏறி வா!
  மல்லிகப்பூ கொண்டு வா!
  நடு வீட்டில் வை
  நல்ல துதி செய்.

 

 • கை வீசம்மா கை வீசு
  கடைக்குப் போகலாம் கை வீசு
  மிட்டாய் வாங்கலாம் கை வீசு
  மெதுவாய் திங்கலாம் கை வீசு
  கோயிலுக்குப் போகலாம் கை வீசு
  கும்பிட்டு வரலாம் கை வீசு

 • ம்மா இங்கே வா வா
  சை முத்தம் தா தா
  லையில் சோறு போட்டு
  ‘ஈ’ யை தூர ஓட்டு
  ன்னைப் போன்ற நல்லாள்
  ரில் யாரு உள்ளார்
  ன்னால் உனக்குத் தொல்லை
  தும் இங்கே இல்லை
  யம் இன்றி சொல்வேன்
  ற்றுமை என்றும் பலமாம்
  தும் செயலே நலமாம்
  ஒளவை சொன்ன மொழியாம்
  தே எனக்கு வழியாம்

 

 • சின்ன முள்ளு பெரிய முள்ளு அண்ணன் தம்பியாம்.
  தனித்து ஓடும் வேக முள்ளு துரத்திச் செல்லுமாம்.
  சின்ன முள்ளு சோம்பேறியாம், பார்த்து நடக்குமாம்.
  பெரிய முள்ளு சுறுசுறுப்பாய் சுற்றி நடக்குமாம்.
  வேக முள்ளு நொடி அறுபது விரைந்து சுற்றினால்,
  பெரிய முள்ளு ஒரு நிமிடம் சென்று காட்டுமாம்.
  பெரிய முள்ளு சுற்றி வரும் நிமிடம் அறுபதை,
  சின்ன முள்ளு மணியைக் காட்டி பெருமை கொள்ளுமாம்.
  ஒவ்வொன்றும் தனித்தனியே சென்றபோதிலும்,
  பனிரெண்டு மணியில் மட்டும் சேர்ந்துகொள்ளுமாம்.
  சண்டையிட்டுக் கொண்டாலும் அண்ணன் தம்பிதான்.
  சமயம் வரும் நேரத்திலே சேர்ந்து கொள்ளுங்கள்.

 

 • ஒன்பது ஒன்னும் பத்து
  இது கூட்டல் கணக்கு தம்பி
  பத்தில் இரண்டு போக எட்டு
  இது கழித்தல் கணக்கு தம்பிநல்லதை என்றும் கூட்டவேண்டும்
  அல்லதை நீக்கிக் கழிக்கவேண்டும்
  திறமை வளர பெருக்க வேண்டும்
  தேர்ந்த கொள்கை வகுக்கவேண்டும்மனதால் போடும் மணக்கணக்கு
  விடை மாறிப்போனால் பிழைகணக்கு
  கணித மேதை ராமானுஜராய்
  கணக்குப் புலியாய் வா தம்பி

 

 • ஒன்னு-ஒங்க வீட்டுப் பொண்ணு
  ரெண்டு-தாத்தா தலையில சிண்டு
  மூனு-ஓடும் கிளை மானு
  நாலு-நாய்க்குட்டி வாலு
  அஞ்சி-அவரக்கா பிஞ்சி
  ஆறு-பச்ச வாழத் தாறு
  ஏழு-கேழ்வரகு கூழு
  எட்டு-கையின் மணிக் கட்டு
  ஒன்பது-உலகம் உன்னை நம்புது
  பத்து-அத்திப்பழம் சொத்து

பிள்ளைப் பருவத்தை என்னோடு சேர்ந்து கொண்டாடியதற்கு நன்றி.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.