செத்தும் கெடுத்தான் செவ்வூர் சிவந்தியப்பன்

Spread the love

ஒரு ஊரில் சிவந்தியப்பன் என்று ஒருவன் இருந்தான். அவனுக்கு மற்றவர்கள் நன்றாக வாழ்வது பிடிக்காது.  எப்போதும் மற்றவர்களுக்கு கெட்டதையே செய்து கொண்டிருப்பான்.

அவனது கொடுமைகள் எல்லை மீறின.தேவை என்று கடன் கேட்க வரும் பணத்தைக் கொடுத்துவிட்டு வட்டி மேல் வட்டி வாங்குவான்.கொடுக்கவில்லை என்றால் அவர்களது நிலத்தை அல்லது பொருட்களை அபகரிப்பான்.அடித்து துன்புறுத்துவான்.ஆனால் வீதி அவனை விடவில்லை.பல்வேறு விதமான நோய்கள் அவனை வாட்டின.ஆகவே தான் நீண்ட காலம் வாழ முடியாது என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.தான் செத்த பிறகும் ஊர் மக்கள் நிம்மதியாக வழக் கூடாது என்று எண்ணினான்.
அவன் ஒரு திட்டம் தீட்டினான்.அதன்படி ஊர் மக்களை ஒன்றாக அழைத்தான்.தான் திருந்திவிட்டதாக நாடகமாடினான்.தனது சொத்துகள் அனைத்தையும் ஊர் மக்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டான்.மக்களும் அவனை நம்பிவிட்டனர்.அவன் தன்னுடய கடைசி ஆசையாக தான் இறந்த பிறகு தன்னை தெருவில் தர தரவென்று இழுத்துக் சென்றுதான் புதைக்க வேண்டும்.அப்போதுதான் தான் ஆத்துமா சாந்தி அடையும்,மேலும் தான் செய்த பாவங்களுக்கு பரிகரமாய் அமையும் என்று கூறினான்.ஆனால் ஊர் மக்கள் ஏற்கவில்லை.இருந்தாலும் அவன் கெஞ்சியதில் ஒப்புக்கொண்டனர்.
ஒரு நாள் அவன் இறந்தான்.மக்கள் அவன் சொன்னபடியே அவனை தெருவில் தர தரவென இழுத்துக்கொண்டு சுடுகாடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.திடீரென்று காவலர் ஊர்தி அவர்களை வழிமறித்தது.அவர்களை சிவந்தியப்பனைக் கொன்ற குற்றத்திற்காக கைது செய்வதாக காவலர்கள் கூறினர்.விசாரித்ததில் சிவந்தியப்பன் காவல்துறை ஆய்வாளருக்கு எழுதிய கடிதத்தில் ஊர் மக்கள் தனது சொத்துக்களை அபகரித்து விட்டதாகவும் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் எழுதியுள்ளான்.ஊர் மக்கள் அவனை இழுத்துக் சென்றதும் அதற்கு அத்தாட்சியாக அமைந்தது.
அப்போதுதான் மக்களுக்கு புரிந்தது அவனின் சதி.என்ன செய்வது அனைவரும் காவல் நிலையத்தை நோக்கி நடந்தனர்.சிவந்தியப்பன் இருந்தும் கெடுத்தான்,செத்தும் கெடுத்தான்” என்று புலம்பிக்கொண்டே சென்றனர்.
சிவந்தியப்பனைப் போன்று அடுதவர்களுக்கு கெடுதலை செய்பவர்களிடம் “செத்தும் கெடுத்தானாம் சிவந்தியப்பன்.அத போல நீ செஞ்சிக்கிட்டு இருக்க” என்று கூறுகிறோம்.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.


Spread the love

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
avatar
  Subscribe  
Notify of
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.