கல்லத்தி-மரம்

கூடாத எலும்பையும் கூட வைக்கும் கல்லத்தி

மருத்துவம்

ஒரு வருடத்திற்கு முன்பு எங்கள் ஊர் காட்டில் உள்ள கிளாநீர் பற்றியும் அங்கு உள்ள பல பழங்கள் பற்றியும் எழுதியிருந்தேன். அவைகள் நான் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. படிக்காதவர்கள் படித்து தங்களது கருத்தைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். வருகையாளர்களின் அன்பு கலந்த கருத்துக்கள்தான் பதிவர்களுக்கு ஊக்கம் தருவதாக இருக்கும் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன். இன்று, எங்கள் ஊர் காட்டில் நான் பார்த்து தெரிந்துகொண்ட முக்கியமான, மனிதர்களுக்கு பயனுள்ள கல்லத்தி மரம் பற்றி கூறப்போகிறேன்.

இந்த இயற்கை, கடவுள் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம். இயற்கையில் ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு மருத்துவ குணம் உள்ளது என்பதுதான் உண்மை. என்னதான் அலோபதி மருத்துவத்தில் பெரிய பெரிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்தாலும், இயற்கையோடு ஒன்றிய நமது நாட்டு வைத்தியத்திற்கு இணையாகாது. ஒவ்வொரு நோய்க்கும் மருந்து பாட்டி வைத்தியத்திலேயே இருக்கிறது. ஆனால், சொன்னால் வைத்தியம் பலிக்காது என்று மறைத்து வைத்ததால் இன்று பெரும்பாலானவை அழிந்துவிட்டன. ஆனால், ஒரு சில மருத்துவக் குறிப்புகள் காலத்தைக் கடந்து இன்றும் இருக்கின்றன. அவைகளில் ஒன்றுதான் கல்லத்தி.

சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், கட்டுப் போட்டப் பிறகும் சரியாகாது. முருடு போன்ற வீக்கம், ரத்தக்கட்டு போன்றவை இருந்துகொண்டே இருக்கும். எலும்பில் மிக மிக மெல்லிய விரிசல் இருந்தாலும் அந்த வீக்கம் இருக்கும். அவர்கள் அந்த பிரச்சினையுடனேயே வேலை செய்யும்போது மேலும் வலி அதிகரிக்கும். இவற்றிற்கு தீர்வு என்ன? பிரச்சினைக்குரிய இடத்தில் கல்லத்திப் பால் அடிப்பதுதான்.

கல்லத்தி என்பது என்ன?

இது அத்தி மரத்தின் ஒரு வகை. பொதுவாக பாறைகளின் இடுக்கில் வளரும். அதனால்தான் கல்லத்தி எனப்படுகிறது. பொதுவாக காடுகளில் காணப்படுகிறது. அதன் படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கல்லத்தி-மரம்

இது ஒரு அரிய வகைத் தாவரம். எந்த அளவுக்கு என்றால், எங்கள் ஊர்க் காட்டில் இரண்டே இரண்டு மரங்கள்தான் உள்ளன. இம்மரங்கள் பெரும்பாலும் பெரிய பெரிய பாறை இடுக்குகளில், இடுங்கட்டான இடங்களில் மட்டும்தான் வளரும். அடிப்பட்டவர்கள் மரத்தின் அடியை அடைய பாறைகளில் ஏறிச் செல்வதும் கடினம், பாலை பிடித்து வருவதும் கடினம். கல்லுக்குள் ஈரம் என்பார்களே, அந்த ஈரத்தை உறிஞ்சிதான் இந்த மரம் வளர்வதாக பெரியவர்கள் சொல்கிறார்கள்.

எப்படி பால் அடிப்பது?

கல்லத்தி மரத்திலிருந்து பால் எடுக்க வேண்டுமெனில் பொழுது புலர அந்த மரத்தின் பக்கத்தில் இருக்கவேண்டும். அதாவது காலை 6.30 மணிக்குள்தான் அந்த மரத்திலிருந்து பால் வரும். மற்ற நேரங்களில் இரண்டு மூன்று சொட்டுக்கள் எடுப்பதே சவாலாகிவிடும்.

கூர்மையான கல் ஒன்றை எடுத்து கல்லத்தி மரத்தின் மேல் குத்தினால் பால் லேசாக கசியும். அதனை மெல்லிய சிறு துணியினால் (உடம்பின் எந்த இடத்தில் பால் அடிக்கவேண்டுமோ அந்த அகலத்திற்கு) ஒற்றி எடுத்துக்கொள்ளவேண்டும். சொத சொதவென தேவையான அளவு பால் துணியில் உறிஞ்சப்பட்ட பிறகு துணியை விரித்து பக்குவமாக தேவைப்படும் இடத்தில் பத்துப் போடவேண்டும். அல்லது மரத்தைக் கொத்துப் போடும்போதே பாலை எடுத்து பிரச்சினையுள்ள இடத்தில் தடவிவிட்டு பின் அதன்மேல் துணியைப் போடலாம். கீழே உள்ள படத்தில் எவ்வளவு கொத்துப் போட்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்களேன்!

கல்லத்தி-மரம்-closeup

எந்த அளவிற்கு கல்லத்திப் பால் பயன்படுகிறது?

என் அம்மாவிற்கு வண்டியிலிருந்து கீழே விழுந்ததால் வலக்கை மணிக்கட்டு உடைந்தது. கட்டுப்போட்டு குணமான பின்பும் வேலை செய்யும்போது கையில் குடைச்சல் ஏற்படும். குறிப்பாக பாத்திரம் விளக்கினால், அடுத்த ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக, வலி நிவாரணிகளை பயன்படுத்திக்கொண்டு கையையும் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவார்கள். இந்த பிரச்சினை இரண்டு மூன்று வருடங்கள் தொடர்ந்தது.

இறுதியில் இந்த கல்லத்திப் பற்றி தெரிந்தவுடன் காட்டிற்கு சென்று அதன் பாலை மணிக்கட்டு முழுவதும் தடவி ஒருநாள் முழுக்க கைக்கு அசைவு கொடுக்காமல் வைத்திருந்தார். அதன் பிறகு அந்த வலி பிரச்சினையே இல்லை (பத்து வருடம் ஆகிவிட்டது). மூன்று வருடமாக என் அம்மாவிற்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்த அந்த குடைச்சல் எங்கே போனது? அதுவே மருத்துவரிடம் சென்று scan, report மற்றும் வைத்தியம் என்று செய்திருந்தால்….?

ஜவ்வு விடுபட்டதின், எலும்பு முறிவின் நுணுக்கமான பிரச்சினைகளை துல்லியமாக, நிரந்தரமாக சரிசெய்வதுதான் இந்த கல்லத்தியின் பெருமை.

சுற்று வட்டங்களில் இருந்து எங்கள் ஊர் காட்டுக்கு இப்பிரச்சினை உள்ளவர்கள் பலபேர் வந்து பயன்பெறுவதைப் பார்த்திருக்கிறேன். எலும்புப் பிரச்சினை மட்டுமல்ல, அடிப்பட்ட இடத்தில் வீக்கம் இருந்தாலும் இந்த கல்லத்திப் பால் அடித்தால் உடனே சரியாகும்.

“எங்கே போவோம் கல்லத்திக்கு?” என்று கேட்கிறீர்களா? ஆங்காங்கே கடவுள் இந்த கொடையை வளரச் செய்துதான் வைத்திருக்கிறார்; விசாரித்துப் பார்த்தால் தெரியும். கல்லத்திக் கிடைக்காதவர்கள் ஆல மரத்தின் பாலையோ அல்லது அத்தி மரத்தின் பாலையோ இரண்டு மூன்று முறை கூடுதலாக அடித்துப் பயன்பெறலாம்.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

மரிய ரீகன் ஜோன்ஸ்

தமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.

http://www.tamilpriyan.com

20
Leave a Reply

avatar
12 Comment threads
8 Thread replies
1 Followers
 
Most reacted comment
Hottest comment thread
8 Comment authors
Kannanramsuசுதாகர்சுப்புMr.Raja Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
இராஜராஜேஸ்வரி
Guest
இராஜராஜேஸ்வரி

பயனுள்ள பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

Iniya
Guest
Iniya

பயனுள்ள தகவல்வீட்டிலேயே வளர்க்க வேண்டிய மரம்
அதற்கு வரம் தான் இல்லையே. இல்லை வலிகளோடு தானே வாழ்கிறோம். தினமும் தேவைப்படும் ஒன்று யாவருக்கும்.ஆனால் எல்லோருக்கும் கிடைக்காதே. கிடைப்பவர்களாவது பயன் பெறட்டும் நன்றி நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ….!

திண்டுக்கல் தனபாலன்
Guest
திண்டுக்கல் தனபாலன்

அறியாத தகவலின் விளக்கங்களுக்கு நன்றி…

Anand
Guest
Anand

எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது கல்லத்தி பால் கிடைத்தால் அல்லது அம்மரம் இருக்கும் இடம் தெரிந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளவும். 9 மாதங்களாக வலியை அனுபவித்து வருகிறேன். தயவுசெய்து உதவி செய்யுங்கள். தொடர்புக்கு : 9865372220, 9842732220 ஆனந்த். நன்றி.

bandhu
Guest
bandhu

அருமையான விளக்கம்.. மிகப் பயனுள்ள பதிவு..

Anand
Guest
Anand

எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது கல்லத்தி பால் கிடைத்தால் அல்லது அம்மரம் இருக்கும் இடம் தெரிந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளவும். 9 மாதங்களாக வலியை அனுபவித்து வருகிறேன். தயவுசெய்து உதவி செய்யுங்கள். தொடர்புக்கு : 9865372220, 9842732220 ஆனந்த். நன்றி.

வெங்கட் நாகராஜ்
Guest
வெங்கட் நாகராஜ்

பயனுள்ள தகவல்….

கல்லத்தி – தில்லியில் இருக்க வாய்ப்பில்லை…

Ramani S
Guest
Ramani S

இதுவரை அறியாத
பயனுள்ள தகவல்
படத்துடன் பதிவு செய்தது மிகச் சிறப்பு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

சங்கர்
Guest
சங்கர்

,நன்றி நல்ல தகவல்

Mr.Raja
Guest
Mr.Raja

அருமையான பதிவு நண்பர் கல்ஆத்தி

சுப்பு
Guest
சுப்பு

மிக நல்ல பதிவு, நன்றி, இதே போல எலும்பொட்டி தழை என்று ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது, இதுவும் ஒருசில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வளரக்கூடியது, இதனைத்தான் நயமாக அரிது முட்டையின் வெள்ளை கருவை கலந்து புதூர் எலும்பு முறிவு கட்டுகள் போடபடுவதாக கூறப்படுகிறது, இந்த இலையை அரைத்து கட்டினாலும் எலும்பு முறிவுகள்,வழிகள் விரைவில் குணமாகிறது.

சுதாகர்
Guest
சுதாகர்

பாரதி சுதாகர்:
அய்யா,
குழந்தை பிறக்கும் போது குழந்தை வெளியே வராத காரணத்தால் வாக்கம் குழாய் மூலம் பயன்படுத்தி குழந்தையை வெளியில் எடுத்துள்ளார்கள். அந்த குழந்தை வரும் போது அதன் வலது கை முட்டியில் முறிவு ஏற்பட்டது. எங்கு சென்று சிகிச்சை அளித்தும் அந்த வலது கையை முழுமையாக நீட்ட முடியவில்லை தற்போது அவருக்கு 21வயதிற்கு மேல் ஆகிவிட்டது. அவரது கையை சரி செய்ய இயற்கை (அ) சித்த மருத்துவத்தில் வழி இருக்கின்றதா இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்

ramsu
Guest
ramsu

nalla pathivu. enakkum edhu pola ullathu.
payan paduthi parthu meendum ezhuthugiren

Kannan
Guest
Kannan

அருமையான தகவல் நண்ப மேலும் இது போல அறிய தகவ‌ல்களை பதிவிட வேண்டும் இனிய வாழ்த்துக்கள்