முட்டாள் !

கரைந்து போகும் பணத்திற்காக

காலமெல்லாம் பதைக்கிறாய்

மடிந்துபோகும் மக்கள் மீது

மனம் பதற மறுக்கிறாய்

அழிந்து போகும் வாழ்விற்காக

அஞ்சாமல் அலைகிறாய்

சொகுசாக வாழ எண்ணி

சொந்தங்களை மறக்கிறாய்

பாசம் காட்டப் பழகாமல்

பாதிபேரை பகைக்கிறாய்

அறம் செய்ய நினையாமல்

அடுக்கடுக்காய் சேர்க்கிறாய்

சமத்துவம் சரிந்தால் சளைக்கிறாய்

சரிக்கு சரிகட்ட துணிகிறாய்

நீ வாழ பிறர் வாழ்வை

நித்தம் நித்தம் வஞ்சிக்கிறாய்

உரிமை உரிமை என உரைத்து

பிறர் உரிமை பறிக்கிறாய்

தேவை தேவை என்று

தேவைக்கு மேல் சுரண்டுகிறாய்

முட்டாள் ! முட்டாள் ! முட்டாள் மனமே !

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
திண்டுக்கல் தனபாலன்
நவம்பர் 30, 2012 5:29 மணி

உண்மை… உண்மை… உண்மை…

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.