இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்காதே

lion and deer

ஒத்த பழமொழிகள்:

1.     கிடைக்கப் போகும் பலா காயைவிட கையில் இருக்கும் கிலாக் காய் மேல்.
2.     வச்ச பதம் இருக்க பிச்சை பதம் வேண்டாம்.
மூன்று பழமொழிகளும் கிட்டத்தட்ட ஒரே பொருளை உணர்த்துகின்றன.

கதை:

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று மிகுந்த பசியோடு இரையைத் தேடிக்கொண்டிருந்தது.நாள்
முழுவதும் தேடியும் ஒன்றும் அகப்படவில்லை.அதனால் அதற்கு பசியால் உயிரே போகிவிடும்
போலிருந்தது.
கடைசியில் மாலையில் ஒரு முயலைக் கண்டுவிட்டது.அது தூங்கிக் கொண்டிருந்தது.சிங்கம் தன்
மனதிற்குள் நினைத்தது
,”நாம் இப்போதைக்கு ஏதாவது சாப்பிடவில்லையென்றால் இறந்தே விடுவோம்.இந்த
முயலை சாப்பிட்டால் இன்று ஒருநாள் சமாளித்துக் கொள்ளலாம்.பிறகு நாளை பார்த்துக்
கொள்ளலாம்.” என்று எண்ணிக்கொண்டே நிதானமாக முயலை நோக்கி சென்று
கொண்டிருந்தது.

ஆனால் என்ன ஆச்சர்யம்! கொஞ்சம் தூரத்தில் மான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.”ஆ!
நாம் இந்த மானைக் கொன்றால் நான்கு நாள் சாப்பிடலாம்” என்று எண்ணிய சிங்கம்
அதனைத் துரத்தியது.lion and deer
இந்த சத்தத்தை கேட்டு தூங்கிக் கொண்டிருந்த முயல் எழுந்து ஓடிவிட்டது. மானை பிடிக்க முடியுமா? சிங்கத்தால் இயலவில்லை.இறுதியில் இரண்டையும் விட்டுவிட்டு பசி தாங்க முடியாமல் செத்தே போனது அந்த சிங்கம்.
இதேபோன்று யாராவது கிடைத்த பொருளை விட்டுவிட்டு கிடைக்காத பொருளுக்காக ஆசைபடும்போது
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்காதே” என்போம்.

1.     கிடைக்கப் போகும் பலா காயைவிட கையில் இருக்கும் கிலாக் காய் மேல்:

எடுத்துக்காட்டாக நாம் ஒரு வேலையில் இருக்கிறோம் என்றால் அந்த வேலையை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.அதைவிட நல்ல வேலை கிடைக்கப்போவதாக இருந்தாலும் கூட அது உறுதியாகும்வரை
இருக்கும் வேலையை விட்டுவிடக்கூடாது.அதாவது நம்மிடம் இருக்கும் பொருளே உயர்ந்தது
என்ற எண்ணம் வேண்டும்.

2.       வச்ச பதம் இருக்க பிச்சை பதம் வேண்டாம்.

நமது வாழ்க்கை தரம் சாதாரணமாக இருக்கலாம்.ஆனால் ஆடம்பரமாக வாழ்பவர்களைப் பார்த்து
நாமும் அப்படியே வாழ ஆசைப்பட கூடாது.அப்படி ஆசைபடும்போது கடன் வாங்கியவது அப்படி
வாழ்கிறோம்.அதாவது நமக்கு அருளப்பட்டதைவிட அதிகமாக ஆசைபடுகிறோம்.
வச்ச
பதம்
என்பது நமக்கு அருளப்பட்ட வாழ்க்கை.பிச்சை பதம் என்பது அளவுக்கு அதிகமாக ஆசைபடுதல்.
நமக்கு கொடுக்கப்பட்டதை வைத்துக்கொண்டு தன்னிறைவு அடைய முயற்சிப்போம்.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.