இது எப்படி இருக்கு?

சிரிப்புபனை மரத்திலிருந்து கீழே விழுந்து பொழச்சவனும் இருக்கான்; புல் தடுக்கி விழுந்து செத்தவனும் இருக்கான்.

அறிவாளியா இருந்து அழிஞ்சவனும் இருக்கான்; சிறு உழைப்பாளியா இருந்து முதலாளியா ஆனவனும் இருக்கான்.

ஏழை வீட்டுல பொறந்து மாடி வீட்டுல வாழ்க்கப்பட்டவளும் இருக்கா; மகாராணியா வளர்ந்து கோர வாழ்க்கைக்கு ஆளானவளும் இருக்கா.

அதிஷ்டத்துல முன்னேறுபவங்களும் இருக்காங்க; கஷ்டத்துல ஆண்டியாகறவங்களும் இருக்காங்க.

படிச்சி படிச்சியே பைத்தியம் ஆனவனும் இருக்கான்; படிக்காமலேயே தேர்ச்சி பெறுபவனும் இருக்கான்.

பெத்த பிள்ளையால வஞ்சிக்கப்பட்டவங்களும் இருக்காங்க; பெறாத பிள்ளையால உச்சி குளிர்ந்துபோனவங்களும் இருக்காங்க.

படிச்ச முட்டாள்களும் இருக்காங்க; படிக்காத மேதைகளும் இருக்காங்க.

உதவி உயர்ந்தவங்களும் இருக்காங்க; உதவாம ஓட்டாண்டியா ஆனவங்களும் இருக்காங்க.

பழகி வஞ்சித்தவங்களும் இருக்காங்க; பழகாமலேயே காப்பாற்றுபவங்களும் இருக்காங்க.

கொடுக்கற கொடையாளிகளும் இருக்காங்க; கொடுக்காத கஞ்சன்களும் இருக்காங்க.

நம்பாம ஏமாந்தவங்களும் இருக்காங்க; நம்பி பொழச்சவங்களும் இருக்காங்க.

உழச்சி முன்னேறனவங்களும் இருக்காங்க; உழைக்காம பிறர சுரண்டுறவங்களும் இருக்காங்க.

பாவம் செஞ்சி திருந்தி வாழ்ந்தவங்களும் இருக்காங்க; புண்ணியம் செய்யறேன்னு பாவியானவங்களும் இருக்காங்க.

பிறருக்காக கதறி அழுபவங்களும் இருக்காங்க; பிறர கதற வச்சி சிரிப்பவங்களும் இருக்காங்க.

பேசியே சொதப்புகிறவங்களும் இருக்காங்க; பேசாம சாதிப்பவங்களும் இருக்காங்க.

அள்ளிக்கொடுப்பவங்களும் இருக்காங்க; அள்ளிக்கொள்ளவே வாழ்பவங்களும் இருக்காங்க.

ரசிச்சு வாழறவங்களும் இருக்காங்க; வாழாம சலிச்சிக்கிறவங்களும் இருக்காங்க.

பிறருக்காக ஓடா உழைக்கறவங்களும் இருக்காங்க; பிறர் உழைப்பில் அட்டையா ஒட்டிக்கொள்கிறவங்களும் இருக்காங்க.

அடக்கமா அரும்பெரும் செயல்களை செய்யறவங்களும் இருக்காங்க; ஆரவாரத்தோடு உப்புக்கு உபயோகமில்லாத செயல்களை செய்யறவங்களும் இருக்காங்க.

 

இந்த உண்மைகளுக்கான உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
8 Comments
Inline Feedbacks
View all comments
Rupan
நவம்பர் 24, 2013 3:41 காலை

வணக்கம்
அண்ணா

நல்ல வினாக்கள் வினாவி பதிவு அமைத்த விதம் நன்று.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன்
நவம்பர் 24, 2013 12:25 மணி

உண்மைகள்…

தொடர வாழ்த்துக்கள்…

Ramani S
நவம்பர் 24, 2013 8:27 மணி

மிகவும் ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Ramani S
நவம்பர் 24, 2013 8:28 மணி

tha.ma 2

sudar jegan
ஏப்ரல் 27, 2014 2:38 மணி

mr.jon…padichipaithiyakaran anavanum irukan…..it is ture….

Bernard
Bernard
மே 1, 2015 5:05 மணி

நல்ல முயற்சி,,,,, பதிவுகள் அருமை…….keep rocking…நான் தங்கள் பக்கத்து ஊரான விரியூரில் வசிக்கிறேன்

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.