சுதந்திரம்

Spread the love

 

indiaமறக்க முடியுமா? மறுக்க முடியுமா?
நினைக்கச் சொல்லுதே! நினைக்க வைக்குதே!
புகழச் சொல்லுதே! போற்றச் சொல்லுதே!
தியாக தீபங்களின் தியாக வாழ்வை!எத்தனை போராட்டங்கள்! எத்தனை மறியல்கள்!
எத்தனை குழப்பங்கள்! எத்தனை முழக்கங்கள்!
எத்தனை இயக்கங்கள்! எத்தனை இறப்புகள்!
எத்தனை கொடுமைகள்! எத்தனை வேதனைகள்!

சிறைச் செல்லவில்லையா நம் காந்தீஜி?
செக்கிழுக்க வில்லையா நம் வ.உ.சி.?
தனிப்படை அமைக்க வில்லையா நேதாஜி?
தாய்க்கொடிக்கு உயிர்விட வில்லையா குமரன்?

சுதந்திரம் கிடைத்ததே நமக்கு ஓசி!
செம்மை உள்ளங்களின் தியாகத்தை நீ யோசி!
சும்மா கிடைத்ததா இந்த சுதந்திரம்?
சுத்த உழைப்பில் கிடைத்ததே சுதந்திரம்!

வெள்ளையரை விரட்டிய சுதந்திரம்!
வெகுவாய் வீரத்தை விதைத்த சுதந்திரம்!
தாய்நாட்டை மீட்டு தந்த சுதந்திரம்!
திருநாடாய் திளைக்க வைத்த சுதந்திரம்!

அச்சத்தை ஒழித்த சுதந்திரம்!
அறநாடாய் மாற்றிய சுதந்திரம்!
அந்நியருக்கு பாடம் புகட்டிய சுதந்திரம்!
அனைவரும் அனுபவிக்கும் இந்த சுதந்திரம்!

தீரர்களின் தியாகத்தால் பெற்ற சுதந்திரம்!
தியாகிகள் தந்த சொத்து இந்த சுதந்திரம்!
இந்தியனாக இருக்கச் சொல்லும் சுதந்திரம்!
இந்தியாவின் உயிர்மூச்சுதானே சுதந்திரம்!

ஜெய்ஹிந்த்!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.


Spread the love

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
avatar
  Subscribe  
Notify of
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.