இந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை

Spread the love

சமீபத்தில் என் நண்பனுடைய கணினியில் ஒரு காணொளி கண்டேன். அது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியின் சிறு துணுக்கு. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பொது இடங்களில் மக்களிடம் கேள்விகளை கேட்பார். மக்கள் வினோதமான பதில்களை கூறுவார்கள். அதுதான் அந்த நகைச்சுவை நிகழ்ச்சியின் கருத்தாக்கம்.
நான் பார்த்த காணொளியில் என்ன கேள்வியென்றால் “தேசிய கீதம் என்ன? அதை யார் எழுதியது?” என்பதுதான். ஆனால் இந்த கேள்விக்குக் கூட யாருக்கும் பதில் தெரியவில்லை என்பதுதான் வேதனை. ஒருவர் தேசிய கீதம் நீராரும் கடலுடுத்த என்கிறார். மற்றொருவர் அதை எழுதியது திருவள்ளுவர் என்கிறார், மற்றும் பலர் தேசிய கீதத்தை எழுதியது சாலமன் பாப்பைய்யா என்கின்றனர்.
அந்த காணொளியைப் பார்த்து எனக்கு வேதனை வந்துவிட்டது. தேசிய கீதம் கூட என்னவென்று தெரியாமல் இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்களே என்று எண்ணினேன். அதனால் இந்தியர்கள் ஒவ்வொருவரும் அடிபடையாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியவைகளை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் கூறுவது எனக்கு தெரிந்தவை மட்டுமே. நீங்களும் உங்களுக்கு தெரிந்தவற்றை இங்கு கூறுங்கள்.Map of India
·         இந்தியாவின் தலை நகரம்: புது தில்லி

·         இந்தியாவில் உள்ள மாநிலங்கள்:

மொத்தம் 28
1.   ஆந்திர பிரதேசம்
தலை நகரம்:
ஹைதெராபாத்
2.   அருணாச்சல பிரதேசம்தலை நகரம்: இட்டாநகர்
3.   அஸ்ஸாம்
தலை நகரம்: திஸ்பூர்
4.   பீகார்
தலை நகரம்:
பாட்னா
5.       சட்டீஸ்கர்தலை நகரம்: ராய்பூர்
6.       கோவாதலை நகரம்: பனாஜி
7.       குஜராத்தலை நகரம்: காந்திநகர்
8.       ஹரியானாதலை நகரம்: சண்டிகர்
9.       ஹிமாச்சல பிரதேசம்தலை நகரம்: சிம்லா
10.   ஜம்மு மற்றும் காஷ்மீர்தலை நகரம்: ஸ்ரீநகர்
11.   ஜார்கண்ட்தலை நகரம்: ராஞ்சி
12.   கர்நாடகாதலை நகரம்: பெங்களூரு
13.   கேரளாதலை நகரம்:திருவனந்தபுரம்
14.   மத்திய பிரதேசம்தலை நகரம்: போபால்
15.   மகாராஷ்டிராதலை நகரம்: மும்பை
16.   மணிப்பூர்தலை நகரம்: இம்பால்
17.   மேகாலயாதலை நகரம்: ஷில்லாங்
18.   மிசோரம்தலை நகரம்: அயிஸ்வால்
19.   நாகாலாந்துதலை நகரம்: கோஹிமா
20.   ஒரிசாதலை நகரம்: புவனேஸ்வர்
21.   பஞ்சாப்தலை நகரம்: சண்டிகர்
22.   ராஜஸ்தான்தலை நகரம்: ஜெய்ப்பூர்
23.   சிக்கிம்தலை நகரம்: காங்டாக்
24.   தமிழ்நாடுதலை நகரம்: சென்னை
25.   திரிபுராதலை நகரம்: அகர்தலா
26.   உத்தர பிரதேசம்தலை நகரம்: டேராடூன்
27.   உத்தரகண்ட்தலை நகரம்: டெஹ்ராடூன்
28.   மேற்கு வங்காளம்தலை நகரம்: கொல்கத்தா
குறிப்பு: சண்டிகர் ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக உள்ளதை கவனிக்கவும்.

·        

யூனியன் பிரதேசங்கள்:

மொத்தம் 7.
1.       அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்தலை நகரம்: போர்ட் பிளேயர்
2.       சண்டிகர்தலை நகரம்: சண்டிகர்
3.       தாத்ரா மற்றும் நகர் ஹவேலிதலை நகரம்: சில்வாசா
4.       டாமன் மற்றும் டையூதலை நகரம்: டாமன்
5.       லட்சத்தீவுகள்தலை நகரம்: கவரட்டி
6.       தில்லிதலை நகரம்: தில்லி
7.       பாண்டிச்சேரிதலை நகரம்: பாண்டிச்சேரி
    
சண்டிகர் யூனியன் பிரதேசமாகவும் மற்றும் இரு மாநிலங்களுக்குத் தலை நகராகவும் உள்ளதை கவனிக்கவும்.
தில்லி நாட்டின் தலை நகராகவும் யூனியன் பிரதேசமாகவும் உள்ளதை கவனிக்கவும்.
·         தேசிய கீதம்: ஜன கண மன
எழுதியது: ரபீந்திரநாத் தாகூர்.
எழுதிய மொழி: வங்காளம்
·         தேசிய பறவை: மயில்
·         தேசிய விலங்கு: புலி
·         தேசிய மலர்: தாமரை
·         தேசிய விளையாட்டு: ஹாக்கி
·         தேசிய கனி: மாம்பழம்
·         தேசிய மரம்: ஆலமரம்
·         தேசிய நதி: கங்கை
·         தேசிய பாடல்: வந்தே மாதரம்
எழுதியவர்: பக்கிம் சந்திர சட்டர்ஜி
·         தேசிய சின்னம்: அசோகச் சக்கரம்

·         தேசிய கொடி பற்றி:

இந்திய தேசிய கொடி

உயர நீள பாகுபாடு: 2:3
மேல் நிறம்: காவி
நடு நிறம்: வெள்ளை
கீழ் நிறம்: பச்சை
அசோக சக்கரத்தின் நிறம்: கடற்படை நீலம்

·         இந்திய நாணய குறியீடு: இந்திய நாணய குறியீடு

உதாரணத்திற்கு ரூபாய் 50 என்பதை image50 என்று குறிப்பிட வேண்டும்.
·         இந்தியா ஒரு தீபகற்ப நாடு. தீபகற்பம் என்பது மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட நாடு. இந்தியாவின் மேற்க்கே அரபிக் கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் சூழ்ந்துள்ளன.
·         முதல் குடியரசுத் தலைவர்: முனைவர். ராஜேந்திர பிரசாத்
·         முதல் பெண் குடியரசுத் தலைவர்: பிரதிபா தேவிசிங்க் பாட்டீல்
·         முதல் பிரதமர்: ஜவஹர்லால் நேரு
·         முதல் பெண் பிரதமர்: இந்திரா காந்தி
·         இந்தியா பரப்பளவில் ஏழாவது மிகப்பெரிய நாடு.

·         ரூபாய் நோட்டில் உள்ள மொழிகள்:

1. அஸ்ஸாமி
2. பெங்காலி
3. குஜராத்தி
4. கன்னடம்
5. காஷ்மீரி
6. கொங்கனி
7. மலையாளம்
8. மராத்தி
9. நேபாளி
10.ஒரியா
11.பஞ்சாபி
12.சமஸ்கிருதம்
13.தமிழ்
14.தெலுங்கு
15.உருது
·         இந்தியா உலகில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை 1,241,491,960 .
·         சிறிய மாநிலம்: கோவா
·         பெரிய மாநிலம்: ராஜஸ்தான்
·         இந்தியா கேட் டெல்லியில் உள்ளது.
.   இந்தியாவின் நுழைவு வாயில் என அழைக்கப்படுவது மும்பை.
·         சதுரங்க விளையாட்டைக் கண்டுபிடித்தது இந்தியா.
·         சுழியம் (0) கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள்.
·         இந்தியா ஒரு துணை கண்டம்.

·         இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள்:

மேற்கே பாக்கிஸ்தான், வட கிழக்கே பூடான், சீனா மற்றும் நேபாளம் மற்றும் கிழக்கே பர்மா மற்றும் பங்களாதேஷ் உள்ளன. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் எல்லைக்கு அருகில் இலங்கை மற்றும் மாலத்தீவுகள் உள்ளன. மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா உள்ளன.
·         இந்தியா சுதந்திரம் அடைந்தது ஆகஸ்டு 15 1947
·         இந்தியா குடியரசு நாடானது ஜனவரி 26 1950. மேலும் அரசியலமைப்பு சட்டம் அன்றுதான் நடைமுறைக்கு வந்தது.
·         உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் ஆக்ராவில் உள்ளது.
மேலும் உங்களுக்குத் தெரிந்தவற்றையும் கூறுங்கள்.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.


Spread the love

2
Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
avatar
2 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
0 Comment authors
dhandapanis suresh Recent comment authors
  Subscribe  
Notify of
s suresh
Guest
s suresh

பயனுள்ள தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

dhandapani
Guest
dhandapani

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள்.அன்பருக்கு இனிய வாழ்த்தும்,பாராட்டும்.,

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.