மரமாய் பிறக்க வேண்டும்

tree
tree
மரமே!
நாங்கள் உன்னை வளர்க்கிறோம்
;

நீ
எங்களுக்காகவே வளர்கிறாய்.
பூமியிலிருந்து
சத்துக்களை உறுஞ்சுகிறாய்
;
நன்றிக்கடனாக
வெள்ளத்தின் போதும் புயலின் போதும்
மண்ணரிப்பைத்
தடுக்கிறாய்.
நாங்கள்
தண்ணீர் ஊற்றுகிறோம்
;
கைமாறாக
எங்களுக்கு காய் கனிகளைத் தருகிறாய்.
நன்றி
மறவா பிறவியே!
உன்னை
வெட்டுபவர்களைக் கூட மன்னித்து
அவர்களுக்கு
பயன்படும் பொருளாகிறாய்.
வெட்டினாலும்
இறந்துவிடுவதில்லை நீ!
தன்னமிக்கையுடன்
மீண்டும் எழுந்து
உலகிற்கு
சேவை செய்கிறாய்.
கோடை
காலத்தில் தண்ணீர் கிடைக்காதபோது
உன்
இலைகளை உதிர்த்து மனிதர்களுக்காக
தண்ணீரை
விட்டு வைக்கிறாய்.
களைப்பாய்
வருபவர்களுக்கு நிழல் தருகிறாய்.
அனைத்திற்கும்
மேலாக நாங்கள்
உயிர்
வாழ்வதே உன்னால்தான்.பின் என்ன
?
நீதானே
எங்களுக்கு காற்றை உற்பத்தி செய்கிறாய்!
விலங்குகள்
மற்றும் பறவைகளுக்குக் கூட
உறைவிடம்
ஏற்படுத்தித் தருகிறாய்.
நன்மையே
உருவான கடவுள் நீ!
நீ
உலக நன்மைக்காக பாடுபடுகிறாய்.
ஆனால்
நாங்கள்
,
எங்களை
மட்டுமே நினைக்கிறோம்.
அடுத்தவர்களது
செல்வங்களை உறிஞ்சுகிறோம்.
கைம்மாறு
செய்யாமல் நன்றி மறக்கிறோம்.
பொறாமை
கொள்கிறோம்
,சண்டையிட்டுக்
கொள்கிறோம்.
மற்றவர்களை
ஏமாற்றிப் பிழைக்கிறோம்.
பிறர்க்கு
நல்லது செய்வதில்லை
;
நல்லது
செய்ய நினைப்பவகளுக்கும் பழிதேடி தருகிறோம்.
நீ
எங்களுக்கு நல்லது செய்கிறாய்! ஆனால்
,
நாங்கள்
உன்னையும் விடுவதில்லை
;
உன்
காட்டை அழித்து நாட்டை பாழாக்குகிறோம்.
எங்களுக்கு
நீ எவ்வளவோ மேல்.அடுத்த பிறவியில்
,
நான்
உன் மகனாக பிறக்கவேண்டும்.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.