வளமுடன் வாழ 108 சூத்திரங்கள்

Spread the love

வெற்றிஇவைகள் அனைத்தும் என்னுடைய சொந்த சிந்தனைகள். ஆத்திச்சூடி 2013 ஐத் தொடர்ந்து வாழ்க்கைக்குத் தேவையான இந்த கருத்துக்களை கூற வந்திருக்கிறேன். அனைத்தும் படித்தவுடனே புரியும்படியாகத்தான் இருக்கும். புரியவில்லையென்றால் எது புரியவில்லையென பின்னூட்டமிடவும்.

 1. கடமையை செய்.
 2. காலம் போற்று.
 3. கீர்த்தனை பாடு.
 4. குறைகள் களை.
 5. கெட்டவை அகற்று.
 6. கேள்வி வேண்டும்.
 7. கை கொடு.
 8. கோவிலுக்குச் செல்.
 9. கொலை செய்யாதே.
 10. கூச்சம் வேண்டாம்.
 11. தர்மம் செய்.
 12. தாயை வணங்கு.
 13. திமிர் வேண்டாம்.
 14. தீயவை பழகாதே.
 15. துன்பம் துரத்து.
 16. தூய்மையாய் இரு.
 17. தெளிவாக சிந்தி.
 18. தைரியம் வேண்டும்.
 19. தொண்டு செய்.
 20. தோழனை கண்டுபிடி.
 21. சத்துணவு சாப்பிடு.
 22. சஞ்சலம் போக்கு.
 23. சாதனை செய்.
 24. சிக்கனம் தேவை.
 25. சீருடன் வாழ்.
 26. சுத்தம் பேண்.
 27. சூழ்ச்சி செய்யாதே.
 28. செலவை குறை.
 29. சேர்க்கப் பழகு.
 30. சைவம் சிறந்தது.
 31. சொர்க்கம் தேடு.
 32. சோகம் வேண்டாம்.
 33. சோம்பல் அகற்று.
 34. செளந்தர்யம் சேர்.
 35. நம்பிக்கை கொள்.
 36. நிம்மதி பெரிது.
 37. நெஞ்சத்தில் நில்.
 38. நேர்மை கடைபிடி.
 39. நைந்து பழகு.
 40. நொறுங்கத் தின்னு.
 41. நோயை விரட்டு.
 42. பண்புடன் பழகு.
 43. பாவம் செய்யாதே.
 44. பிதற்றல் குறை.
 45. பீடிகை போடாதே.
 46. புண்ணியம் சேர்.
 47. பூசல் நீக்கு.
 48. பெரியோரை மதி.
 49. பேதம் வேண்டாம்.
 50. பைந்தமிழ் பேசு.
 51. பொய் பேசாதே.
 52. முகத்தை சுழிக்காதே.
 53. மூத்தோற்கு உதவு.
 54. மெல்லப் பேசு.
 55. மேலானவை நினை.
 56. மோசம் செய்யாதே.
 57. மௌனம் நல்லது.
 58. வறுமை ஒழி.
 59. வளம் சேர்.
 60. விளையாட்டல்ல வாழ்க்கை.
 61. வீம்பு விலக்கு.
 62. ஒவ்வொன்றாக செய்.
 63. வருவோரெல்லாம் நண்பர்களல்லர்.
 64. வேற்றுமை ஒழி.
 65. வையகம் போற்று.
 66. கலைஞனாய் இரு.
 67. ஞானம் வேண்டு.
 68. குணம் வளர்.
 69. பண்ணிப் பார்.
 70. எண்ணுக உயர்வு.
 71. பயம் தவிர்.
 72. மெய்யூட்டி வளர்.
 73. மெய்யென பேசு.
 74. தன் கையே உதவி.
 75. தீயோடு விளையாடாதே.
 76. மலையோடு மோதாதே.
 77. தடத்தில் நட.
 78. விபரீதம் வேண்டாம்.
 79. கண்டு களி.
 80. அட்டூழியம் செய்யாதே.
 81. கேட்டேதும் பெறா.
 82. நாட்டை நேசி.
 83. வீட்டோடு வாழ்.
 84. வரம் கேள்.
 85. திருடி பிழைக்காதே.
 86. மேதாவித்தனம் வேண்டாம்.
 87. சொல்லுக பயனுள.
 88. பழங்கள் சாப்பிடு.
 89. சினம் தவிர்.
 90. அனுபவம் பலம்.
 91. கண்ணெனப் போற்று.
 92. திருடனே திருந்து.
 93. இறைவனைப் புகழ்.
 94. அமைதி கொள்.
 95. துக்கம் மற.
 96. பங்கம் பண்ணாதே.
 97. அன்பே அச்சாணி.
 98. கொஞ்சி மகிழ்.
 99. மட்டம் தட்டாதே.
 100. சொந்தம் சூழ்ந்திரு.
 101. தவறைத் திருத்து.
 102. அம்மாவே தெய்வம்.
 103. வர்மம் வைக்காதே.
 104. சொல் தவறாதே.
 105. தோள் கொடு.
 106. பேராசைப் படாதே.
 107. புன்னகை அணி.
 108. நீடுழி வாழ்.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.


Spread the love

5
Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
avatar
3 Comment threads
2 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
சிவம் சக்திவேல்Ramani Sமரிய ரீகன் ஜோன்ஸ்துளசி கோபால்திண்டுக்கல் தனபாலன் Recent comment authors
  Subscribe  
Notify of
திண்டுக்கல் தனபாலன்
Guest
திண்டுக்கல் தனபாலன்

அருமை என்று சொல்வதை தர வார்த்தைகள் இல்லை…

தொடர வாழ்த்துக்கள்…

துளசி கோபால்
Guest
துளசி கோபால்

அருமை!

101 வாசிச்சதால் சொல்றேன்

105 ள் வரணுமே!

108 ழி இல்லையோ?

சிவம் சக்திவேல்
Guest
சிவம் சக்திவேல்

புரிந்துகொள்ள மிக இலகுவாகவும், அருமையாகவும் உள்ளது நண்பரே ……….

Ramani S
Guest
Ramani S

ஆழமான அற்புதமான சிந்தனை
படிக்கவும் மனதில் பதியவைத்துக் கொள்ளவும்
மிகவும் அருமையாக எளிமையாகத்
தந்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.