மகாத்மா காந்தி

mahatma gandhiஅடிமையை போக்க வந்த வாய்மையே !

அன்பு வழிகாட்டித் தந்த அற நெறியே !

சாந்தமே உருவான சத்தியமே !

காந்தத்தை பெயராய்க் கொண்டவரே !

சீலம் சிறிதும் குறையாத எளியவரே !

மாந்தர்கள் போற்றும் நல்லவரே ! – எம்

மனதில் மிடுக்காய் என்றும் உள்ளவரே !

சற்றும் நேர்மை பிறழா வலியவரே !

தியாக வாழ்க்கை வாழ்ந்தவரே !

திருநாட்டின் சிறையிருப்பை ஒழித்தவரே !

எங்களின் மனம் விரும்பும் கரும்பே !

எளிய உருவம் கொண்ட இரும்பே !

உலகம் வியக்க வாழ்ந்த சிகரமே !

உலகோர் போற்றும் நல் உத்தமரே !

மகாத்மாவே எங்களின் ஜீவாத்மாவே !

உம்மை மறவோம் எந்நாளுமே !

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
திண்டுக்கல் தனபாலன்
நவம்பர் 22, 2012 5:00 மணி

சிறப்பான வரிகள்… பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்…

இராஜராஜேஸ்வரி
ஜனவரி 14, 2013 6:41 காலை

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.