பைத்தியங்கள் பலவிதம்

Spread the love

Sethu-vikram

துன்பங்கள் வந்தால் குடித்தால்தான் மனநிம்மதி எனக்கருதி போதைக்கு அடிமையாகும் பைத்தியங்கள் சிலர்.

பணம் பணம் என்று பணத்தைத் தேடி அலைகின்ற, பணத்திற்காக எதுவும் செய்கின்ற பைத்தியங்கள் பலர்.

பிறர் தன்னைப் பாராட்டவேண்டும் என்பதற்காக வெட்டி பந்தா பண்ணும் பைத்தியங்கள் சிலர்.

வாய்ப்புகளை நழுவ விட்டு, எந்த சிரத்தையும் எடுக்காமல் “ராசி இல்லாதவன் நான்” என சோகமுகத்துடன் திரியும் பைத்தியங்கள் பல.

விபத்தினால் பைத்தியமானவர்கள் ஒரு சிலர்.

பிறரை பைத்தியங்களாக ஆக்குகிற பைத்தியங்களும் உளர்.

சினிமா பார்ப்பது மட்டும்தான் வாழ்க்கை என்ற கனவில் மிதந்துகொண்டிருக்கும் பைத்தியங்களும் உண்டு.

பொய் மட்டுமே பேசும் பைத்தியங்கள் இருப்பதும் நிஜம்.

தான் மட்டுமே நல்லா இருக்கணும் என்ற நோக்கில் வாழும் சுயநல பைத்தியங்களும் உண்டு.

வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி என்ற உண்மையை உணராமல், மனக்கோட்டைக் கட்டி வாழும் பைத்தியங்கள் இருப்பது நன்றன்று.

அழிந்துபோகும் இந்த உடம்பை அளவுக்கு அதிகமாக அலங்காரப்படுத்தி பூஜை பண்ணுபவர்களும் பைத்தியங்கள்தான்.

நல்ல செயல்களை நாளை செய்யலாம் எனத் தள்ளிப் போடுபவர்களும் பைத்தியங்களே.

ஆத்திரத்தை அடக்காமல் அதற்கு அடிமையாகுபவர்களும் பைத்தியங்களே.

மனித வாழ்க்கை ஒரு பெரிய வரம். மனிதனாக வாழ்வதுதான் மனிதனுக்கு அழகு.

நம் வாழ்வின் சிறப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பதை நாம் இனங்கண்டு விடுவித்துக் கொள்ள, வித்தியாசமான கோணத்தில் இந்த இடுகையைக் கொடுத்துள்ளேன்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.


Spread the love

3
Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
avatar
2 Comment threads
1 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Yarlpavanan Kasirajalingamமரிய ரீகன் ஜோன்ஸ்Bagawanjee KA Recent comment authors
  Subscribe  
Notify of
Bagawanjee KA
Guest
Bagawanjee KA

நம்மைப் போன்ற blog பைத்தியங்களும் நாட்டில் உண்டே ,அவர்களை ஏன் விட்டு வீட்டீர்கள் ?
த ம 1

Yarlpavanan Kasirajalingam
Guest
Yarlpavanan Kasirajalingam

சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்
தொடருங்கள்

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.