நவீன கொலைகாரர்கள்

கொலைகாரர்கள்

தனது பேச்சுத் திறமையால் வயித்தடி வாயடி அடிக்கும் கொலைகாரர்கள் உண்டு.

நல்ல சுவையான உணவுகள், பதார்த்தங்கள் செய்து மற்றவர்களை உணவுக்கு அடிமையாக்கி அறுப்புண்டு போகப் பண்ணும் கொலைகாரர்களும் இருக்காங்க.

அடுத்தவர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறித்து தாந்தோன்றித்தனமாக தம்பட்டம் அடித்து வாழும் கொலைகாரர்களும் இருக்காங்க.

பிறர் வாழ்க்கைக்குக் குழி வெட்டியே வாழும் கொலைகார மாக்களும் உண்டு.

அடுத்தவர்களின் சொத்துக்கள், உரிமைகள் இவைகளில் எதை அபகரித்தாலும் அவர்கள் கொலைபாதகர்களே.

மாபாதகம் செய்பவர்களும் கொலைகாரர்களே.

நம்பிக்கை துரோகம் செய்பவர்களும் கொலைகாரர்களே.

தங்கள் வசதிக்கேற்ப பொய்யை மெய்யாக்குபவர்களும், மெய்யை பொய்யாக்குபவர்களும் கொலைகாரர்களே.

பிறர் கண்ணீரில் முன்னேறுபவனும் கொலையாளியே.

உழைப்பிற்கேற்ற ஊதியத்தைக் கொடுக்காமல் ஏய்க்கிறவர்களும் கொலைகாரர்களே.

பொய் சாட்சி சொல்பவர்களும் கொலைகாரர்கள்தான்.

 

ஏங்க ! கத்தி எடுத்து கொன்னாதான் கொலையா? மற்றவர்கள் மனதை உடைப்பதும், சொல்லால் கொல்லுவதும், வஞ்சிப்பதும் ஒரு வகையில் கொலைதானுங்க.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
8 Comments
Inline Feedbacks
View all comments
2008rupan
மே 23, 2014 12:21 காலை

வணக்கம்

இந்த காலத்தில் இதுதான் அரகேற்றம்….. என்ன செய்வது.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ்
மே 23, 2014 1:15 காலை

உண்மை தான். பலர் தினம் தினம் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் – தண்டனை ஏதும் பெறாமலே….

திண்டுக்கல் தனபாலன்

உண்மை தான்… ஒரு நாள் கண்டிப்பாக தண்டனை உண்டு – மனச்சாட்சியிடமிருந்து…

Iniya
மே 23, 2014 4:08 காலை

உண்மை தான் மனிதர்களை எந்த விதத்திலும் பார்வையாலோ, பேச்சாலோ, அல்லது சிரிப்பாலோ கூட நோகடிக்கக் கூடாது அது கூட கொல்லும் என்கிற இங்கிதம் பலருக்கு தெரிவதில்லையே. ஆனாலும் தண்டனை நிச்சயம் உண்டு உடனும் தப்பிக்கவே முடியாது. முன்னர் தான் பிள்ளைகளுக்கு என்று சொல்வார்கள் இப்போது எல்லாம் பெரும்பாலும் அப்படி இல்லை.

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.