என் இந்தியா

india

என் தாய் நாடே ! என் உயிர் மூச்சே !

உன் அழகும், உன் பண்பும்,

விண்ணையும் வியப்பில் ஆழ்த்தும்.

எத்தனை மொழிகள் ! எத்தனை மதங்கள் !

எத்தனை இனங்கள் ! எத்தனை பிரிவுகள் !

எல்லாம் உந்தன் அழகே !

 

உன் வீரம் பெரிது, சாதனை பெரிது.

உந்தன் பண்டைய வரலாறும் அரிது.

உன் மக்கள் எல்லாம் உயர்ந்த குணத்தார்.

சாதிப்பவர், சாதனையாளர்.

சதம் சத்தியம். நித்தம் நிஜம்.

சிறப்பு ! சிறப்பு ! சிறப்பு !

உந்தன் அமைவு சிறப்பு !

பாரம்பரியம் ! சிறப்போ சிறப்பு !

 

இந்திய மண்ணின், வீரமும் தீரமும்,

இன்புறும் நேயமும், இறையாண்மையும்,

இயற்கை அழகும், இனிய காட்சியும்,

இந்நாளும் எந்நாளும் வளரட்டும் !

பாரோர் பார்க்கட்டும் ! பார்ப்போர் வியக்கட்டும் !

ஊரார் கூடட்டும் ! உண்மையென உரைக்கட்டும் !

 

தலை நிமிர்ந்து நில் என் நாடே !

தலைவணங்கா முடியாய் மிளிறு.

தமிழ்நாடே ! தாய் பாரதநாடே !

What’s your Reaction?
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
தொழிற்களம் குழு
டிசம்பர் 3, 2012 9:41 காலை

உங்கள் வரிகளிலேயே நாட்டுப்பற்று தெரிகிறது.கவிதை அருமை

T.N.MURALIDHARAN
டிசம்பர் 16, 2012 1:45 காலை

கவிதை நன்று தமிழ்ப் பிரியன்.

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.