நான் சிம்மராசி

Spread the love

சிம்மராசி
சிம்மராசிக்காரர்கள் அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்களா?
அவர்கள் ராசி அடுத்தவர்களை வாழ விடாதா?
ஆம், என்கிறார்கள் ஜோதிடர்கள். சிம்மராசிக்காரர்கள் நல்லவர்களாக மற்றும் அடுத்தவர்களுக்கு நல்லதயே நினைக்கும் உள்ளம் கொண்டவர்களாக இருந்தாலும் கூட அவர்களது ராசி பலன் காரணமாக எதிர் வீட்டு மனிதர்கள் மிகுந்த கஷ்டப்படுவார்கள் என்கிறார்கள்.
இதெல்லாம் உண்மையா?
உண்மையோ! பொய்யோ!,இதோ எனது வாழ்கையில் நடந்த சம்பவங்களையே உதாரணமா கூறுகிறேன்.
எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்ததில்லை.இருந்தாலும் எனது பெற்றோர்களுக்கு உண்டு.பத்து ஆண்டுகளுக்கு முன்பு புது வீட்டிற்கு குடிவந்தோம்.அன்றிலிருந்து குடும்பத்தில் ஒரே பிரச்சனை.என்ன காரணம் என்று அறிய அப்பாவின் ஜாதகத்தை ஜோதிடரிடம் கொண்டு காட்டினோம்.அவர் கூறியது என்னவென்றால் எங்களின் எதிர்வீட்டு தலைவர் சிம்மராசிக்காரர்.அவரால்தான் எங்களது குடும்பம் கஷ்டப்படுகிறது என்றார்.ஆனால் நான் சிம்மராசி என்பதால் அவரின் சிம்மராசி கொஞ்சம் குறைவான தாக்கத்தையே கொடுக்கும் என்றும் கூறினார்.இருந்தாலும் எங்களது வீட்டை காலி செய்து சென்றுவிடுவதுதான் நல்லது,இல்லையென்றால் கடைசிவரை பிரச்சினைதான் என்றும் சொன்னார்.
அது எங்களது சொந்த வீடு என்றோம்.அதற்கு அவர்,”சரி,அப்படியென்றால் உங்களால் காலி செய்ய முடியாது.கடவுளை நம்பி வேண்டிக்கொள்ளுங்கள்.பிரச்சினைகள் குறையட்டும்.” என்றார்.
நான் உடனே “மனிதர்களுக்கு அவ்வளவு சக்தியென்றால் பிறகு கடவுள் எதற்கு?” என்றேன்.
அவர்,”மனிதர்களுக்கு இல்லை,அவர்களது ராசிக்குதான் சக்தி.நீ நம்பவில்லையா? நீயும் சிம்மராசிக்காரன்.இப்போதுதானே புது வீட்டிற்கு வந்துள்ளாய்?உன்னால் உனது மற்றொரு எதிர்வீட்டுக்காரர்கள் படப்போகும் அவதியை பார்த்த பிறகாவது நம்பு!” என்றார்.
அன்றிலுருந்து என்ன நடக்கிறது என்று கவனிதுக்கொண்டே வந்தேன்.ஆறு மாதத்திலேயே ஏதோ பிரச்சனை காரணமா எதிவீட்டுக்காரர்கள்(சிம்மராசிக்காரர்கள் இல்லை) அவர்களது வீட்டை விட்டுவிட்டு வெளியூரில் குடியேறினர்.அந்த வீடு ஒரு வருடம் காலியாகவே இருந்தது.பிறகு ஒரு குடும்பம் வாடகைக்கு குடிவந்தார்கள்.ஆனால் அவர்கள் அடுதவர்களிடம் கடன் நிறைய வாங்கினர்.கடன் தொல்லையால் நிறைய அவமானங்களை சந்தித்தார்கள்.கடைசியில் தொல்லை தாங்க முடியாமல் ஒருநாள் இரவாடு இரவாக ஊரை விட்டே ஓடிவிட்டார்கள்.இன்றுவரை எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.
பிறகு மற்றொரு குடும்பம் வந்தது.கணவன் மனைவிக்குள் தினமும் சண்டை.அவர்களும் நிமதியாக வாழவில்லை.அவர்கள் முன்னால் கடன்வாங்கி ஊரைவிட்டு ஓடிசென்றவர்களின் சொந்தம்.எனவே கடன் கொடுத்தவர்கள் இவர்களை நச்சரிக்க ஆரம்பித்தார்கள்.இவர்கள் சொந்தவீடு கட்டிக்கொண்டு சென்றவுடன் நடந்த அதிசயம் என்னவென்றால்,கடன் கொடுத்தவர்கள் இவர்களை கேட்பதை விட்டுவிட்டார்கள்.
சில வருடங்கள் அந்த வீடு அப்படியே கவனிப்பாரின்றி இருந்தது.பிறகு வெளியூரில் குடியேறிய வீட்டுக்காரர் வீடை விற்க முன்வந்தார்.அதை பக்கத்து வீட்டுக்காரர்(சிம்மராசிக்காரர்) வாங்கிவிட்டார்.
இதையெல்லாம் பார்த்த பிறகு ராசி என்பது உண்மைதானோ என்று சந்தேகம் வந்துவிட்டது.
ஆனால் அதன் பிறகு நடந்த மற்றொரு நிகழ்வு அந்த சந்தேகத்தை உண்மையாக்கியது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது வீட்டுக்கு அருகில் மூன்று வீடுகள் தள்ளி ஒருவீட்டில் சிம்மராசியுடன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.இதை கேள்விபட்ட அவர்களது எதிர்வீட்டுக்காரர்கள் பயந்துபோய் கண்திருஷ்ட்டி விநாயகர் படத்தை வீட்டின் முன்புறம் மாட்டி வைத்தார்கள்.அப்போதும் வேலைக்கு ஆகவில்லை.அவர்களால் நிம்மதியாக வாழமுடியவில்லை.அக்கம்பக்கத்து வீடுகளுடன் அடிக்கடி சண்டை.எனவே வீட்டின் முன் வாசலை சுவர் வைத்து மறைத்துவிட்டு பின்புற வாசலை உபயோகித்து வந்தனர்.இருந்தாலும் அவர்களுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை,வீட்டை காலி செய்துவிட்டு தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.தற்போது ஒரு குடும்பம் அங்கு வாடகைக்கு இருக்கிறது.அவர்களுக்கு என்ன பிரச்சனையோ! அதைப்பற்றி நான் ஆராயவில்லை.
எங்களுக்கு குடும்பத்தில் இன்றும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.அது எதிர்வீட்டு சிம்மராசிக்காரரால் வருவதாக இருக்கலாம் அல்லது விதியாக இருக்கலாம்.அடுத்தவர்களை குறை கூறுவது தவறு.நமது ஒவ்வொரு செயலுக்கும் நாமே காரணம்.நம்மை மீறிய சக்தியான கடவுள் இருக்கிறார்.அவர் நம்மை கைவிடமாட்டார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும்.அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை.
குறிப்பு:இந்த பதிவு சிம்மராசிக் காரர்களை புண்படுத்த எழுதப்பட்டது அல்ல.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.


Spread the love

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
avatar
  Subscribe  
Notify of
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.