இறைவனின் இன்பப் படைப்பினிலே

bananaஇறைவனின் இன்பப் படைப்பினிலே

இனிமை எல்லாம் இருக்குது !

இதய வானில் மிதந்து வந்து

இன்னிசை இனிதே பாடுது !

எத்துணை அழகு என்று

என் இதயம் எண்ணி மகிழுது !

இதய வாசல் திறந்து வைத்து

வரவேற்பு அளிக்கச் சொல்லுது !

கண்ணுக்கு கடல் விருந்தாக

காட்சியெல்லாம் ஜொலிக்குது !

களிப்பூட்டும் கலை அழகாக

கண்ணெதிரே காணக் கிடக்குது !

சிந்திக்க வைக்கும் சித்திரமாக

சிதறி மணம் பரப்புது !

சித்தரிக்கும் சிலை வடிவாக

சிறந்த படைப்பு சிரிக்குது !

கண்கவர் கலைக் காவியமாக

கண்களில் பசும் திரையோடுது !

பசுமை எழிலின் துள்ளலாக

பார்ப்பவர் மனம் மயக்குது !

உழைப்பவர்க்கு கொடை வள்ளலாக

உண்டிட உணவும் அளிக்குது !

இறைவனின் உயிர் ஓவியமாக – என்

இதயம் கண்டு களிக்குது !

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
திண்டுக்கல் தனபாலன்
மார்ச் 15, 2014 6:27 காலை

அழகான அருமையான வரிகள்…

ரசித்தேன்… வாழ்த்துக்கள்…

வெங்கட் நாகராஜ்
மார்ச் 15, 2014 6:46 காலை

அருமையான கவிதை….

பாராட்டுகள்.

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.