கோலம்

கோலம் போடுவதற்கான காரணம் என்ன?

தெரிந்துகொள்ளுங்கள்

கோலம்நம் வீடுகளில் கோலம் போடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.காலையில் எழுந்து வாசலைப் பெருக்கி கோலம் போடுவார்கள்.தற்போது கோலம் போடும் பழக்கம் கிராமங்களில் மட்டுமே மிஞ்சியுள்ளது.அதுவும் ஒரு சிலர் விழாக்காலத்தில் மட்டுமே கோலம் போடுகின்றனர்.கோலம் போடுபவர்கள் கூட எதற்காக செய்கிறோம் என்றே தெரியாமல் செய்கின்றனர்.
அந்த காலத்தில் காலையில் வாசலில் சாணியை கரைத்து தெளித்தபின் வாசலை பெருக்கி பின் அரிசி மாவால் கோலம் போடுவார்கள்.
எதர்க்காக அரிசி மாவால் கோலம் போடுகிறார்கள்?
பெரியவர்கள் செய்வதற்க்கு கண்டிப்பாக காரணம் இல்லாமல் இருக்காது.அரிசி மாவால் போடும்போது எறும்புகள் அதை இரையாக்கிக் கொள்கின்றன.குருவிகளும் அரிசி மாவை சாப்பிடுகின்றன.அதாவது வாசலையும் அழகாக வைத்துருக்க வேண்டும்.அதே சமயம் பறவைகளுக்கும் எறும்புகளுக்கும் அரிசி இரையாக பயன்படும் என்பதே கோலம் போடுவதின் நோக்கம்.
ஆனால் இன்று என்ன நடக்கிறது?
கோலம் போட கோல மாவைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.அதை சுண்ணாம்புக் கல்லில் தயாரிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.மேலும் அது உயிரினங்களுக்கு பயன்படுவதுமில்லை.கோலமாவு பல வண்ணங்களில் கிடைக்கிறது.அந்தக்காலதுப் பெரியவர்களுக்கு தாங்கள் செய்வது மற்றவர்களுக்கும் உபயோகப்படவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் இருந்தது.ஆனால் கோலம் எதற்காக போடுகிறோம் என்பதை தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்காததால் இப்போது கோலமாவில் கோலம் போடும் நிலைமை வந்துவிட்டது.ஆனால் அதுவும் சரிதான்.இந்த காலத்தில் ஏது குருவி.அதையும்தான் அழித்துவிட்டார்களே நம்மவர்கள்.
சரி.எதற்காக சாணி தெளித்து வாசலை பெருக்கினார்கள்?
அதற்க்கும் முக்கியமான காரணம் இல்லாமல் இருக்காது.எனக்குத் தெரிந்தது என்னவென்றால்,சாணி ஒரு கிருமி நாசினி.அதை வீட்டிற்க்கு முன்னால் தெளிப்பதால் கிருமிகள் நம்மை அண்டுவது குறையும்.
இதேபோன்று நமக்கு காயம் ஏற்பட்டால் காயத்தில் மஞ்சள் தூள் வைக்கிறோம்.அது வலி நிவாரணியாகவும் மற்றும் காயத்தை குணப்படுத்துவதாகவும் செயல்படுகிறது.ஆனால் அதன் உண்மையான காரணம் யாருக்கும் தெரியாது.ஏதோ ரத்தம் நிற்பதற்காக வைக்கிறோம் என்று எண்ணிக் கொள்கின்றனர்.ஆனால் உண்மையில் நாம் தற்போது காயத்தை குணப்படுத்த உபயோகப்படுத்தும் Band-Aid என்பதில் மஞ்சள்தான் மூலப்பொருளாக பயன்படுகிறது.
இப்படி நாம் செய்வதை எதற்காக செய்கிறோம் என்று புரிந்துகொண்டு செய்யும்போது அந்த செயல் காலத்தால் அழியாமல் இருக்கும்.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

மரிய ரீகன் ஜோன்ஸ்

தமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.

http://www.tamilpriyan.com

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of