கவிதைகள் Archive

வேண்டாம், வேண்டவே வேண்டாம்

Credit:Flickr இந்த ஈஸ்டர் திருநாளின் உண்மைப்பொருள் உணர்ந்து சிலவற்றை நமது வாழ்கையில் தவிர்த்தால் நன்மை பயக்கும், நம் வாழ்வும் சிறக்கும் எனக் கருதுகிறேன். நிறைந்தவனை நினையாத நாளே வேண்டாம். உதட்டில் உறவும் மனத்தில் களவும் வேண்டாம். தன்னைப்பற்றியே நினைக்கும் கொள்கை வேண்டாம். பகைவர்களைப் பார்த்துப் பதறுதல் வேண்டாம். மனிதநேயம் இல்லாத மனங்கள் வேண்டாம். கடமை தவறும் …

இறைவனின் இன்பப் படைப்பினிலே

இறைவனின் இன்பப் படைப்பினிலே இனிமை எல்லாம் இருக்குது ! இதய வானில் மிதந்து வந்து இன்னிசை இனிதே பாடுது ! எத்துணை அழகு என்று என் இதயம் எண்ணி மகிழுது ! இதய வாசல் திறந்து வைத்து வரவேற்பு அளிக்கச் சொல்லுது ! கண்ணுக்கு கடல் விருந்தாக காட்சியெல்லாம் ஜொலிக்குது ! களிப்பூட்டும் கலை அழகாக …

புதிய மனிதன்

அற்ப சுவாச மனிதா நீ பிறர் மனங்கள் என்றும் பதறாமல் ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ளதாய் வாழ்ந்திட என்றும் வரம் கேளு.   ஒவ்வொரு மனிதனும் உறவு என்று உன் ஒவ்வொரு மூச்சையும் அன்பாக்கு. ஒவ்வொரு குறைவையும் உடனகற்று. உன் உள்ளத்தின் இருட்டை வெளியேற்று.   பிறர் படும் துன்பம் எனக்கு இல்லை என பாகுபடுத்திப் பார்க்காதே. …

நாம் சிரிக்கும் நாளே திருநாள்

பாவத்தில் பிறந்து பாவத்திலே வளர்ந்து பாவமூட்டை சுமந்து பரகதி சேர பதற்றமாய் வாழும் பாவி மானிடா! பள பளப்பாய் தெரியுதா வாழ்க்கை? மாயையான உலகில் நீ ஒரு நடிகனடா. பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்தேன் டா… டா… போகிறேன் என்கிறாயா? நீ பிறந்தது வீணிலும் வீணடா. யார் வாழ்ந்தால் எனக்கென்ன? நான் வாழ்கிறேன் என நகைக்கிறாயா? முன்னவனைவிட …

சுதந்திரம்

  மறக்க முடியுமா? மறுக்க முடியுமா? நினைக்கச் சொல்லுதே! நினைக்க வைக்குதே! புகழச் சொல்லுதே! போற்றச் சொல்லுதே! தியாக தீபங்களின் தியாக வாழ்வை!எத்தனை போராட்டங்கள்! எத்தனை மறியல்கள்! எத்தனை குழப்பங்கள்! எத்தனை முழக்கங்கள்! எத்தனை இயக்கங்கள்! எத்தனை இறப்புகள்! எத்தனை கொடுமைகள்! எத்தனை வேதனைகள்! சிறைச் செல்லவில்லையா நம் காந்தீஜி? செக்கிழுக்க வில்லையா நம் வ.உ.சி.? …

காமராஜர்

நல்லவரைத் தன்னருகில் வைத்துக் கொண்டவர் நாடு போற்றும் நலத் திட்டங்களை வகுத்தவர் கல்வி என்ற கனவை நனவாக்கியவர் அணைகள் கட்டி விவசாய நெஞ்சை நிமிர்த்தியவர் தமிழகத்தை செழிக்க வைத்த ‘திகம்பரர்’ தமிழகத்தை மாநிலங்களின் முன்னோடியாக்கியவர் வெள்ளை கதராடையணிந்த வெள்ளை உள்ளத்தவர் அண்ணல் அன்புநேசர், கர்மவீரர் காமராசர் சுகங்களைத் துறந்து, பிரம்மச்சாரியாக இருந்து சொந்த வாழ்வை மறந்து …

வளமுடன் வாழ 108 சூத்திரங்கள்

இவைகள் அனைத்தும் என்னுடைய சொந்த சிந்தனைகள். ஆத்திச்சூடி 2013 ஐத் தொடர்ந்து வாழ்க்கைக்குத் தேவையான இந்த கருத்துக்களை கூற வந்திருக்கிறேன். அனைத்தும் படித்தவுடனே புரியும்படியாகத்தான் இருக்கும். புரியவில்லையென்றால் எது புரியவில்லையென பின்னூட்டமிடவும். கடமையை செய். காலம் போற்று. கீர்த்தனை பாடு. குறைகள் களை. கெட்டவை அகற்று. கேள்வி வேண்டும். கை கொடு. கோவிலுக்குச் செல். கொலை …

ஆத்திச் சூடி 2013

நான் ஒரு புலவர் ஆக முடிவெடுத்துவிட்டேன். அதனுடைய துவக்கம்தான் இது. ஆத்திச் சூடி போன்று ஒரு பாடல் எழுதலாம் என்று முயன்றிருக்கிறேன். ஓசைகள் சரியாக அமையவில்லை என்றாலும், கூற வரும் கருத்தை கவனிக்கவும். அன்புடன் அனுகு ஆணவம் அகற்று இரவல் விலக்கு ஈதல் ஒதுக்கேல் உறுதியே துணை ஊனத்தை இகழேல் எள்ளி நகையேல் ஏளனம் பேசேல் …

அணில்(பாட்டு)

அணிலே! அணிலே! அழகு அணிலே! அக்கம் பக்கம் பார்த்துப் பார்த்து வேகமாய் ஓடும் விரைவு அணிலே! அனைவரும் அன்பாய் அழைக்கும் நல்ல அருமை அணில் பிள்ளை நீதானே! கிளைக்கும் இலைக்கும் வலிக்காமல் வெகு விரைவாய் தாண்டிடும் அறிவே! வாலை நிமிர்த்தி ஓடும் விவேகியே! ஆல அரச மரங்களிலே ஆடி ஓடி பழங்களுண்டு கொட்டைகளைக் கொரித்துத் தின்று …

உண்மை+உழைப்பு=மனிதன்

வாழப் பிறந்தவன் மனிதன். சோம்பித் திரிபவன் மனிதனல்ல. படைக்கத் தெரிந்தவன் மனிதன். அழிக்கத் தெரிந்தவன் மனிதனல்ல. அன்பாய் இருப்பவன் மனிதன். அரக்கன் என்றும் மனிதனல்ல. வாழ வைப்பவன் மனிதன். வஞ்சிப்பவன் மனிதனல்ல. சிரித்து வாழ்பவன் மனிதன். சிரிக்க வாழ்பவன் மனிதனல்ல. தொழில் எதுவானாலும், தூய சிந்தனை கொண்டதாக! தொழிலாளிகளே! படைப்பாளிகளே! சிந்தனையாளர்களே! சாதனையாளர்களே! வாழ்க பல்லாண்டு! …
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.