அடிமையை போக்க வந்த வாய்மையே ! அன்பு வழிகாட்டித் தந்த அற நெறியே ! சாந்தமே உருவான சத்தியமே ! காந்தத்தை பெயராய்க் கொண்டவரே ! சீலம் சிறிதும் குறையாத எளியவரே ! மாந்தர்கள் போற்றும் நல்லவரே ! – எம் மனதில் மிடுக்காய் என்றும் உள்ளவரே ! சற்றும் நேர்மை பிறழா வலியவரே ! …
சமீபத்தில் என் நண்பனுடைய கணினியில் ஒரு காணொளி கண்டேன். அது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியின் சிறு துணுக்கு. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பொது இடங்களில் மக்களிடம் கேள்விகளை கேட்பார். மக்கள் வினோதமான பதில்களை கூறுவார்கள். அதுதான் அந்த நகைச்சுவை நிகழ்ச்சியின் கருத்தாக்கம். நான் பார்த்த காணொளியில் என்ன கேள்வியென்றால் “தேசிய கீதம் …