பழமொழிகளும் கருத்துக்களும் பகுதி-9

Spread the love

பகுதி-8 ஐ படிக்க இங்கு சொடுக்கவும்.

1. அந்தி மழை அழுதாலும் விடாது.

பகலில் மழை பெய்தால் அது சிறிது நேரத்தில் விட்டுவிடும். ஆனால், இரவில் பெய்தால் அது கண மழையாகவோ அல்லது அடை மழையாகவோதான் இருக்கும். அடை மழை போன்று துன்பம் வரும்போது இந்த பழமொழியை உபயோகப்படுத்துவர். மழை

2. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

நாம்தான் பெரியவர் என்று அகம்பாவத்தில் இருக்கக் கூடாது. எந்தவொரு செயலை செய்வதிலும் நம்மைவிட வலிமையான திறமையானவர்கள் உண்டு என்பதை நினைவில் கொண்டு ஆணவம் தவிர்த்து வாழவேண்டும்.

3. அகல உழுகிறதை விட ஆழ உழு.

நிலத்தை உழும்போது, சீக்கிரம் உழவேண்டும் என்பதற்காக அகல உழுதால் பயிர் நன்றாக வளராது; ஆழ உழுதால்தான் நாம் விளைவிக்கும் பயிர் நன்கு வேரூன்றி தழைத்து வளர முடியும். அதுபோல, எந்த ஒரு காரியத்தையும் மேலோட்டமாக செய்யாமல், அதில் முழுவதுமான கவனம் செலுத்தி செய்தால் நமது உழைப்பிற்கான பூரண பலன் கிடைக்கும்.

4. அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் தேனும்.

சிலர் தேன் ஒழுக பேசுவார்கள்; நமக்கு உதவி செய்வதுபோல் நடிப்பார்கள். ஆனால், அவர்களது உள்ளம் முழுதும் தீய எண்ணங்களே நிறைந்திருக்கும். அப்படிப்பட்டவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

5. பசி ருசி அறியாது.

வீட்டில் அம்மா சமைத்து வைத்ததை அருமையாகவே இருந்தாலும் அது சரியில்லை இது சரியில்லை என்று கூறி அவர்கள் மனதை புண்படுத்துவோம். ஏனென்றால், பசிக்கும்போது சாப்பாடு கிடைப்பதால் அதன் அருமை தெரிவதில்லை. அதுவே பல நாட்கள் சாப்பிடாத பசியால் வாடிக்கொண்டிருக்கும் ஒருவனிடம் எவ்வளவு கேவலமான ருசியுள்ள உணவைக் கொடுத்தாலும் அதனை அவன் வெளுத்து வாங்குவான்.

6. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.

நாம் யானை வளர்த்தால், அது வாழும்போதும் நமக்கும் மற்ற மனிதர்களுக்கு பல வகைகளில் உதவுகிறது. மேலும் அது இறந்தாலும் அதன் உடல் பாகங்கள் அனைத்தும் நல்ல விலை போகும். அதுபோல, வள்ளல்கள் சிலர் இருந்தாலும் மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவார்கள்; இறந்தாலும், மற்றவர்களுக்கு உதவுவதற்கான சூழ்நிலையை அமைத்துவிட்டு செல்வார்கள்.

7. நெருப்பு நெருப்பா திங்கறவன் கரி கரியா பேளுவான்.

பழமொழி என்னவோ அருவருப்பாக இருந்தாலும், அதன் கருத்து உண்மைதான். யாரும் தங்களுடைய வினைப்பயனிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.

8. கழுத விட்டையா இருந்தாலும் கை ரொம்பனா சரி.

இலவசத்திற்கு அலைபவர்கள், தரமற்ற பொருட்களை வாங்குபவர்கள் எல்லாம் இந்த மனோபாவம் கொண்டவர்கள்தான். அதாவது, நூறு ரூபாய்க்கு ஒரு கிலோ தரமான ஆப்பிள் பழம் வாங்கலாம் என்று வைத்துக்கொள்வோம். சிலர் அதில் திருப்தி ஆகமாட்டார்கள். வேறு ஒரு கடையில் அதே நூறு ரூபாய்க்கு இரண்டு கிலோ தரமற்ற ஆப்பிள் பழம் தருகிறார்கள் என்றால் அதைத்தான் வாங்குவார்கள். அவர்களுக்கு நிறைய கிடைக்கவேண்டும் என்றுதான் விருப்பமே தவிர தரத்தைப் பற்றி கவலை இல்லை.

மேலும் ஒரு உதாரணம்: நாம் என்னதான் நம் நண்பர்களுக்கு கோடி ரூபாய் பெறுமானம் உள்ள உதவி செய்திருந்தாலும் அது அவர்களுக்கு பெரிதாக தெரியாது. அதுவே குறைந்த செலவில் ஒரு பெரிய பொருளை வாங்கி அவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கும்போது அவர்கள் நம்மை மெச்சிக்கொள்வார்கள்.

9. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நல்ல மனிஷனுக்கு ஒரு சொல்லு.

பெரியவர்கள் தவறு என்று சொல்லி செய்யக்கூடாது என்றதை மீண்டும் செய்யும் மனிதன் மனிதனே இல்லை.

10.தன் காலுக்கு தானே முள் தேடுவது போன்று.

ஒத்த பழமொழிகள்:

  • வேலியில் இருக்கும் ஓணானை வேட்டிக்குள் எடுத்துவிட்ட கதையாட்டம்.
  • வீதியில போற சனியனை வீட்டுக்குள் கூப்பிட்டு வந்ததுபோல்.
  • சொந்த காசுல சூன்யம் வைத்த கதைபோல்.
  • சனியன தூக்கி பனியன்ல போடாத. (நவீன பழமொழி என்று கூறலாம்.)

சில நேரங்களில் நாம் தேவையில்லாமல் செய்யும் சில காரியங்கள் நமக்கே தீங்கு விளைவிப்பதாக முடியும். இந்த கருத்தையே மேற்கண்ட பழமொழிகள் வலியுறுத்துகின்றன.

11.சொன்னா பொண்டாட்டி செத்துடுவா; சொல்லலனா புருஷன் செத்துடுவான்.

மருத்துவர், கணவனுக்கு கொடிய நோய் இருப்பதை மனைவியிடம் கூறினால், தனக்கும் அந்த நோய் இருக்கோமோ என்ற அதிர்ச்சியில் மனைவி இறந்துவிடுவாள். அதனை கணவனுக்குத் தெரியப்படுத்தி அவனுக்கு மருத்துவம் பார்க்கவில்லை என்றால், நோய் பெரிதாகி கணவன் இறந்துவிடுவான்.

அதைப்போல, வாழ்கையில் சில நேரங்களில் ஒரு செயலை செய்யவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருப்போம். ஆனால், அதை செய்தால் நமது நண்பர்களுக்கு கெடுதல் வரலாம்; செய்யவில்லையென்றால் நமக்கு கெடுதல் வரும். அந்த நேரத்தில் எதையுமே செய்யமுடியாமல் தவிப்போம். அந்த சூழ்நிலைக்கு ஏற்ற பழமொழிதான் இது.

12.வெட்டிட்டு வான்னா கட்டிட்டு வரனும்.

ஒத்த பழமொழி:

  • எள்ளுன்னா எண்ணையா நிக்கணும்.

“விறகு வெட்டிட்டு வா என்றால், “காட்டிற்கு சென்று விறகுகளை வெட்டி அதனை கட்டுகளாக கட்டி வீட்டிற்கு கொண்டு வா” என்று அர்த்தம். அடிமுட்டாள்கள்தான் விறகுகளை வெட்டி அப்படியே போட்டுவிட்டு வந்து, “நான் விறகுகளை வெட்டிவிட்டேன்” என்று கூறுவார்கள். பின், நாம் அவர்களுக்கு “மீண்டும் போய் அவைகளை கட்டிக்கொண்டு வீட்டிற்கு எடுத்துவா” என்று கூறவேண்டியதாய் இருக்கும். அதுபோல, நாம் ஒரு செயலை செய்யும்போது மிகுந்த ஈடுபாட்டுடன் கவனமாக செவ்வனே செய்யவேண்டும்.

13. வந்தா வறுசட்டி வச்சி வறுப்பான்.

ஒரு வீட்டிற்கு விருந்தாளியாகப் போகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள், விருந்தினராகிய நம்மை உபசரிக்க சமையல் செய்து வைத்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் நாம் வரும்போதுதான் அதனை செய்வார்கள் (உதாரணம்: சட்டியில் பயிர் வறுத்தல்). அப்போது நம்மிடம் கூறுவார்கள், “வாங்க! உங்களுக்காகத்தான் மெனக்கெட்டு இத செய்யிறேன்.” என்று.

அதாவது, அவர்கள் நமக்காக செய்வது நமக்குத் தெரியவேண்டுமாம். இது போலியான பாசத்தைக் குறிக்கிறது. இவர்கள் நாம் அவர்கள் வீட்டிற்கு போகும்போது மட்டுமே நம்மை போலியாக கவனிப்பார்கள்; பாசத்தைக் கொட்டுவார்கள். ஆனால், பிற நாட்களில் நம்மை பற்றிய நினைப்பே அவர்களுக்கு இருக்காது.

மேலும் ஒரு உதாரணமாக அலுவலகங்களை எடுத்துக்கொள்ளலாம். ஒருசிலர் நாள் முழுக்க தூங்கிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், மேற்பார்வையாளர் வரும்போது அப்படியே வானத்தையே வலைப்பதைப் போன்று வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் இந்த பழமொழி கொண்டு குறிப்பிடலாம்.

14.கோழியைக்கேட்டு மசாலா அரைப்பதில்லை.

“கோழி! கோழி! நான் ஒன்ன கொழம்பு வைக்கட்டுமா?” என்று அதனிடம் போய் கேட்டால் அது வேண்டாம் என்றுதான் சொல்லும். அதுபோல, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு முடிவு எடுக்கும்போது, அது சரி என்று தோன்றினால், அவர்களாகவே அதை எடுக்கவேண்டியதுதான். தனக்கு கீழ் இருப்பவர்களிடன் கேட்டால் அவர்கள் கூறும் கருத்துக்களால் குழப்பம்தான் வரும்.

15.குடுமியை பிடிச்சிக்கிட்டுதான் கூலியை கேட்கணும்.

ஒருசில அலுவலகங்களில் முதலாலிகள் தொழிலாளிகளுக்கு சரிவர கூலி கொடுக்க மாட்டார்கள். அப்போது என்ன செய்வது? தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்துதான் தங்களது சம்பளத்தைப் பெறுவர். வேலை செய்தால்தான் முதலாளிக்கு லாபம் வரும். அதுதான் முதலியின் குடுமி.

அதுபோல, வாழ்கையில் நியமாக நமக்கு கிடைக்க வேண்டியவற்றை ஒருவரிடம் இருந்து வாங்க, அவர்களைப் பற்றிய ஏதாவது ஒன்று நமக்கு பிடிப்பாக இருக்கவேண்டும். உதாரணமாக ஒரு வேலையை செய்யும்போது முழுவதையும் முடித்து கொடுத்துவிடாமல், பாதி கொடுத்துவிட்டு மீதி பாதியை ஊதியம் கொடுத்தபிறகு கொடுக்கலாம்.

தொடரும்…

What’s your Reaction?
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
+1
4

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.


Spread the love

3
Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
avatar
3 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
0 Comment authors
Maatamilmaria prince jeromeதிண்டுக்கல் தனபாலன் Recent comment authors
  Subscribe  
Notify of
திண்டுக்கல் தனபாலன்
Guest
திண்டுக்கல் தனபாலன்

விளக்கங்கள் மிகவும் அருமை… உங்களின் தேடல் தொடரட்டும்… பாராட்டுக்கள்…

வாழ்த்துக்கள்…

maria prince jerome
Guest
maria prince jerome

nice proverbs

Maatamil
Guest
Maatamil

தமிழ் பதிவர்கள் இணைந்து நடத்தும் மாதமிழ் தளத்தில் தங்களின் பதிவுகளையும் இணைத்து உதவுமாறு அன்போடு வேண்டுகிறோம்

http://maatamil.com

நன்றி

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.