விதியேனு போனா மதியேனு வருது

  இந்த பழமொழியை அடிக்கடி நாம் உபயோகிக்கின்றோம்.நாம் நல்லதே செய்தாலும் அது கெட்டதாக மாறும்போது இந்த பழமொழியை பயன்படுதுகின்றோம்.
உதாரணமாக நாம் நமது நண்பர்களுக்கு நல்லது செய்வோம்.ஆனால் அவர்கள் நம் மீது பொறாமை கொண்டிருந்தால் அவர்களது சிந்தனை வேறு விதமாக இருக்கும். அதாவது இவன் ஏன் நமக்காக இதைச் செய்கிறான்,நமக்கு ஏதோ கெடுதல் செய்ய நினைக்கிறான் என்று நினைத்துக் கொண்டு நமக்கே கெடுதல் செய்வார்கள்.இதற்கு மட்டும் அல்ல.வேறு பல நிகழ்வுகளுக்கும் இந்த பழமொழி பேசப்படுகின்றது.இந்த பழமொழிக்கு உதாரணமாக ஒரு நிகழ்வை காண்போம்.
 

 ஒருநாள்
ராஜாவின் நண்பன் ரமேஷ் ராஜாவின் வீட்டு கதவைத் தட்டினான்.என்ன என்று பார்க்கும் போது
ரமேஷின் மகனுக்கு காலில் அடிப்பட்டு ரத்தம் ஒழுது கொண்டிருந்தது.ஒரு விபத்தில் இப்படி
நடந்திருக்கிறது.ரமேஷ் தன்னுடைய மகனை மருத்துவமனைக்கு அழைத்துக் செல்ல வேண்டும் என்றும்
அதற்கு ராஜா தனது காரை எடுத்து வரவேண்டும் என்று உதவி வேண்டினான்.
  ராஜா மனமிலகி
கிளம்பினான்.போகும்போது செலவுக்கு பணம் எடுத்துக் சென்றான்.ரமேஷ் மகனின் நிலமை மிகவும்
மோசமாக இருந்ததாலும் தனியார் மருத்துவமனையில் சிறப்பான வைத்தியம் பார்ப்பார்கள் என்பதாலும்
அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கே அழைத்துக் சென்றான்.
மருத்துவமனையில்
அவனை சேர்க்க வேண்டுமென்றால் ரூ.10000 முன்பணம் கட்டவேண்டும் என்றனர்.ஆனால் ரமேஷிடமோ
அவ்வளவு பணம் இல்லை.எனவே ராஜாவே அதைக் கட்டினான். அடுத்த நாள் அவள் வேலைக்கு செல்ல
வேண்டியிருந்ததால் ரமேஷிடம் சொல்லிவிட்டு சென்றான்.
  இரண்டு
நாட்களில் ரமேஷின் மகனுக்கு குணமானது.அவன் மீதி பணத்தைக் கட்டிவிட்டு தன் மகனை வீட்டிற்கு
அழைத்து வந்தான்.இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு ராஜா மிகவும் சந்தோசப்பட்டான்.ஒரு மாதம்
கழித்து ராஜாவுக்கு பணம் தேவைப்பட்டது.எனவே அவன் ரமேஷிடம் தான் அவனுடைய மகனுக்காக கொடுத்த
ரூ.10000 தைக் கேட்டான்.
ஆனால்
ரமேஷ் அவனிடம்
,”யார் உன்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சொன்னது?உன்னால் எனக்கு இருபதாயிரம் ரூபாய் நஷ்டம்.அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தால்
செலவே ஆகியிருக்காது.அதெல்லாம் உனக்கு ஒன்றும் தர முடியாது” என்று ஏமாற்றிவிட்டான்.
  ராஜா நொந்து
கொண்டாலும் அவன் தனது நண்பன் செய்த பல உதவிகளை எண்ணி விட்டுவிட்டான்.ஆனால் அன்றிலிருந்து
ரமேஷ் ராஜாவிடம் பேசுவது கிடையது.ரமேஷ் ராஜாவைப் பற்றி ஊர் முழுவதும் தூற்றிக் கொன்றிருந்தான்.இதை
அறிந்த ராஜாவின் தயார் அவனிடம்
,”நீ அனைவருக்கும் நல்லதுதானே செய்கிறாய்.ஏன் அனைவரும் உனக்கு எதிரிகளாய் மாறுகின்றனர்?” என்று கேட்டார்.
அதற்கு
அவன்
,”நான் என்னமா
செய்றது
?விதியேனு போனா மதியேனு வருது!”என்று புலம்பினான்.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

0
Would love your thoughts, please comment.x
()
x